திருவனந்தபுரம்: தனது இல்லத்தில் அமலாக்கத்துறை நடத்தும் சோதனைகள் ராகுல் காந்திக்கு “மன திருப்தியை” அளித்திருக்கும் என கேரள மாநில முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கடந்த வாரம் முதல்வர் சதீஷன் தலைமையில் காங்கிரஸ் மாநில அரசு பொறுப்பேற்ற நிலையில், நேற்று (மே 27) அன்று அமலாக்கத்துறையினர், முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீடு, அவரது மகள் வீடு உள்பட 10க்கும்மேற்படட இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது. இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இநத நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பிரனராயி விஜயன் , தற்போது ராகுல் காந்தியின் ஆசை நிறைவேறியிருக்கும், அவருக்கு மன திருப்தியை அளித்திருத்திருக்கும் என தெரிவித்துள்ளார்.
“நீண்டநாட்களாகவே என்வீட்டில் சோதனை நடத்த அமலாக்கத்துறை விரும்பியது. பினராயி விஜயன் வீட்டில் ஏன் சோதனை நடத்தப்படவில்லை, பினராயி விஜயன் ஏன் கைது செய்யப்படவில்லை என்று ராகுல் காந்தி கேட்டுக்கொண்டே இருந்தார். தற்போது இந்தச் சோதனை சிலருக்கு, குறிப்பாக ராகுல் காந்தி போன்றவர்களுக்குப் பெரும் திருப்தியையும், மனநிறைவையும் அளிக்கும் என நினைக்கிறேன்.
பா.ஜ.க அரசு எப்போதுமே நாட்டில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராகத் திட்டமிட்ட தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதற்கு எதிரான வலுவான போராட்டங்கள் நாடு முழுவதும் எழுந்துள்ளன. தங்களைத் தவிர மற்ற கட்சிகளுக்கு எதிரான அமலாக்கத்துறையின் அத்துமீறல் தொடர வேண்டும் என்பதுதான் காங்கிரஸின் நிலைப்பாடு.” என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், இதுபோன்ற நடவடிக்கைகள் எங்களை அச்சுறுத்தவோ , பலவீனப்படுத்தவோ செய்யாது எனவும் தெரிவித்தார்.
[youtube-feed feed=1]