சென்னை: குதிரை பேரத்தில், அதிமுகவில் இருந்து தவெகவுக்கு தாவியதால், தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜிநாமா செய்த மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை ஆகிய தொகுதிகள் இன்று காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தவெக-வின் குதிரை பேர அரசியல், குதிரை வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது.

தமிழ்நாடு அரசியல் களத்தில் குதிரை பேர அரசியல் மும்முரமாக நடைபெற்ற வருகிறது. பெரும்பான்மை இல்லாத தவெக, தனது பெரும்பான்மைக்கு தேவையான எம்எல்ஏக்களை, குதிரை பேர அரசியல் மூலம் தவெகவுக்கு இழுத்து வருகிறது. இதில் வெற்றியும் பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக 3 அதிமுக எம்எல்ஏக்கள், இதுவரை தங்களை வெற்றிபெற வைத்த மக்களுக்கு எந்தவொரு உதவியும் செய்யாத நிலையில், திடீரென தங்களது பதவி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு, அடுத்த 10 நிமிடங்களில் தவெகவில் இணைந்து உறுப்பினர்கள் அட்டையையும் பெற்றனர்.
மேலும், அவர்களது ராஜினாமா குறித்து ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டிய சபாநாயகரோ, அடுத்த ஒரு மணி நேரத்தில், ராஜினாமா ஏற்பட்டுள்ளதாக அவசரம் அவசரமாக அறிவித்த நிலையில், இன்று காலை, அந்த 3 தொகுதிகளும் காலியான அறிவித்துள்ளார்.
அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை ஆகிய தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டு அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 4 தொகுதிகள் காலியாக உள்ளது. இந்த தொகுதிகளில் அடுத்த 6 மாதங்களுக்குள் தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கிடையில் மேலும் சில அதிமுக எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடைபெற்று வருவதாகவும், அவர்களும் விரைவில் தவெகவில் ஐக்கியமாவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
[youtube-feed feed=1]