சென்னை: நடந்து முடிந்த சட்​டப்​பேரவைத் தேர்​தலில் தமிழக காங்​கிரஸின் தோல்வி குறித்து விரி​வாக ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட உண்மை கண்​டறி​யும் குழு அறி​விக்கப்பட்டுள்​ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலில் திமுக தலை​மையி​லான கூட்​ட​ணி​யில் காங்​கிரஸ் கட்சி 28 தொகு​தி​களில் போட்​டி​யிட்​டது. முடி​வில் வெறும் 5 தொகு​தி​களில் மட்​டுமே அக்​கட்சி வெற்​றி​பெற்று சரிவைச் சந்​தித்​தது. இந்​தத் தோல்விக்கு கட்​சி​யின் உள்​ளூர் நிர்​வாகி​கள் மற்​றும் தொண்​டர்​கள் பல தொகு​தி​களில் முறை​யாகத் தேர்​தல் பணி​யாற்​றாததும், சொந்​தக் கட்​சி​யின் வேட்​பாளர்​களை வீழ்த்​தும் நோக்​கில் கட்சி விரோத செயல்​களில் சிலர் ஈடு​பட்​டது​தான் முக்​கியக் காரணம்  புகார்கள் எழுந்தன.

இதையடுத்​து, தேர்​தல் தோல்வி மற்​றும் புகார்​கள் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்​ப​தற்​காக, தமிழக காங்​கிரஸ் மேலிடப் பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர் பிரத்​தி​யேக குழுவை அமைத்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அதி​காரப்​பூர்வ அறி​விப்​பில், “தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலில் கட்​சி​யின் வெற்றி வாய்ப்பை பாதிக்​கும் வகை​யில், கட்சி விரோத நடவடிக்​கை​களில் ஈடு​பட்​டோரை கண்​டறிந்து நடவடிக்கை எடுக்க இந்த உண்மை கண்​டறி​யும் குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த குழு​வில் தலை​வ​ராக முன்​னாள் எம்​.பி. ஜெயக்​கு​மார் செயல்​படு​வார். தமிழக காங்​கிரஸ் துணைத் தலை​வர்​கள் சொர்ணா சேது​ராமன், சி.டி.மெய்​யப்​பன், கமலிகா காம​ராஜர் ஆகியோர் உறுப்​பினர்​களாக இடம்​பெற்​றுள்​ளனர்” எனத் தெரி​வித்​துள்​ளார்.

இக்​குழு​வினர் விரை​வில் பாதிக்​கப்​பட்ட தொகு​தி​களுக்கு நேரில் சென்று வேட்​பாளர்​கள் மற்​றும் உள்​ளூர் நிர்​வாகி​களிடம் விசா​ரணை நடத்​தி, தங்​கள் இறுதி அறிக்​கையை டெல்லி மேலிடத்​திற்கு சமர்ப்​பிக்க உள்​ளனர்.

இதன் அடிப்​படை​யில் கட்​சிப் பணியை சரி​யாக செய்​யாதவர்​கள் மீது கடுமை​யான ஒழுங்கு நடவடிக்​கை பா​யும்​ எனத் தெரிகிறது.

கிரிஷ் சோடங்கரின் மற்றொரு பதிவில்,  “எங்​களை நீங்​கள் தாக்க நினைத்​தால் தாராள​மாகத் தாக்​குங்​கள், ஆனால் வாக்​களித்த தமிழக மக்​களைத் தாக்​காதீர்​கள். எங்​களை விமர்​சிக்க ஒவ்​வொரு அரசி​யல் கட்​சிக்​கும் உரிமை உண்​டு. அதற்​காக நாங்​கள் ஒரு​போதும் ஆத்​திரப்பட மாட்​டோம்.

ஆனால் தமிழக மக்​கள் வழங்​கிய ஜனநாயகத் தீர்ப்பை யாரும் கேள்வி கேட்​கவோ அவம​திக்​கவோ கூடாது. தமிழக மக்​கள் அரசி​யல் முதிர்ச்சி உடைய​வர்​கள்; அவர்​கள் புத்​திக் கூர்​மை​யுட​னும் தெளிவுட​னும் வாக்​களிப்​பவர்​கள். எங்​களது தலை​வர்​கள் அல்​லது எங்​களது கட்​சிக்கு எதி​ரான தனிப்​பட்ட விமர்​சனங்​களுக்கு பதிலளிக்​கக் கூடாது என்று நாங்​கள் விழிப்​புணர்​வுடன் முடிவு செய்​தோம்.

நாங்​கள் நினைத்​திருந்​தால், ஒரு தசாப்த கால​மாக முக்​கிய அமைச்​சரவை பதவி​களை​யும் அதி​காரத்​தை​யும் அனுப​வித்​து​விட்​டு, 2014 மக்​கள​வைத் தேர்​தலில் இழைக்​கப்​பட்ட மாபெரும் துரோகத்தை அனை​வருக்​கும் நினை​வூட்​டி​யிருக்க முடி​யும். ஆனால் நாங்​கள் அதைச் செய்​ய​வில்​லை.

தமிழக வரலாற்​றில் அவர்​கள் (தி​முக) ஒரு​போதும் மீண்​டும் ஆட்​சி​யைப் பிடித்​த​தில்லை (தொடர்ந்து இரண்​டாவது முறை ஆட்சி அமைத்​த​தில்​லை) என்​பதை நன்​றாக அறிந்​திருந்​தும், எங்​களுக்கு வெற்றி வாய்ப்​பு​கள் இருந்​த​போ​தி​லும் அந்த கூட்​ட​ணி​யில் இணைந்​தோம். மக்​களின் தீர்ப்பை பணிவுட​னும் பெருந்​தன்​மை​யுட​னும் மதிப்​பதே எங்​கள் கோட்​பாடு” எனத் தெரி​வித்​துள்​ளார்.

இதே​போல் கிருஷ்ணகிரி முன்​னாள் எம்பி செல்​ல​கு​மார், “அவர்​கள் தரம் தாழ்ந்து போய்​விட்​டார்​கள் என்​ப​தற்​காக காங்​கிரஸ் தரம் தாழ்ந்து போய்​விட முடி​யாது. ஒவ்​வொரு​வரும் தங்​களு​டைய ஆழ்​மன​தில் என்ன இருக்​கிறதோ அதைத்​தான் வார்த்​தைகளாக வெளிப்​படுத்​து​வார்​கள்.

ஆகவே தரம் தாழ்ந்து பேசும் மனிதர்​களுக்கு காங்கிரஸ் கட்சி ஒரு​போதும் முக்​கி​யத்​து​வம் கொடுத்​தது இல்​லை. மக்​கள் மாற்​றத்தை வேண்​டும் என வாக்​களித்​திருக்​கிறார்​கள். அதி​காரத்​தில் இருந்​தவர்​கள் செய்த தவறுகள், அரசி​யல்​வா​தி​களின் அராஜகம் ஆகிய​வற்​றைக் கண்​டித்து புதிய மாற்​றத்​துக்​காக மக்​கள் விரும்​பி​னார்​கள்.

யாராக இருந்​தா​லும் இதை ஜனநாயக ரீதி​யாக ஏற்​றுக்​கொள்ள வேண்​டும். அது​தான் அரசி​யல் இயக்​கத்​துக்கு சிறந்த எடுத்​துக்​காட்​டு.

திமுக ஆட்சி மீதான அதிருப்​தி​தான் காங்​கிரஸ் வேட்பாளர்கள் தோல்​வியடையக் காரண​மாக இருந்​தது. அந்த ஆட்சி மீது இருந்த ஊழல் குற்​றச்​சாட்​டுக்​கள்​தான் மக்​கள் கொந்​தளித்து வரு​வதற்கு காரண​மாக இருந்​தது. ஆனால் பாஜக எந்த விதத்​தி​லும் ஆட்சி அதி​காரத்​துக்கு வந்​து​விடக்​கூ​டாது என்​ப​தற்​காகவே திமுகவுடன் தேர்​தல் கூட்​டணி வைத்​தோம். அதனால் அதி​காரத்​தில் எங்​களுக்கு எந்​தப் பலனும் கிடைக்​க​வில்​லை.

அனிதா ராதாகிருஷ்ணன் எந்​தக் கட்​சிக்கு விசு​வாச​மாக இருந்​தார். நாளைக்கு அவர் காங்​கிரஸில் வந்து ஐக்​கிய​மா​னால் கூட ஆச்​சரியப்​படு​வதற்கு இல்​லை” எனத் தெரி​வித்​துள்​ளார்.

இதே​போல் காங்​கிரஸ் கட்​சி​யைச் சேர்ந்த பல தலை​வர்​களும் தி​முக இளைஞரணி நிர்​வாகி​கள் கூட்​டத்​தில் காங்​கிரஸைக் கண்​டித்து நிறைவேற்​றப்​பட்ட தீர்​மானம் மற்​றும்​ தி​முக தலை​வர்​களின்​ கருத்​துகளுக்​கு கடும்​ எதிர்ப்​பு தெரிவித்​து வருகின்​றனர்​.

 

[youtube-feed feed=1]