சென்னை: துறை​முகம் – மதுர​வாயல் இடையே​யான மேம்​பாலப் பணி​கள் 2027 நவம்​பர் மாதத்​துக்​குள் நிறைவடை​யும் என்​று சென்னை துறை​முகத்​தின் தலை​வர் எஸ்​.​விஸ்​வ​நாதன், காம​ராஜர் துறை​முகத்​தின் தலை​வர் ஜெ.பி.ஐரின் சிந்​தியா தெரி​வித்​தனர்.

 சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் வர்த்தகப் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான 20.6 கி.மீ நீள ஈரடுக்கு உயர்மட்டச் சாலைப் பணிகள், சுமார் 3,500 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மிக முக்கிய சிறப்பம்சம் இதன் ஈரடுக்கு வடி வமைப்பாகும். இதில் மேல் அடுக்கு பிரத்யேகமாக சென்னை துறைமுகத்திற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் கனரகக் கண்டெய்னர் லாரிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் லாரிகள் நகரின் பொதுப் போக்கு வரத்திற்கு இடையூறு இல்லாமல் தடையின்றி பயணிக்க முடியும். அதே வேளையில் கீழ் அடுக்கு உள்ளூர் வாகனப் போக்குவரத்திற்காக வடி வமைக்கப்பட்டுள்ளது.

நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வாக னங்கள் ஏறி இறங்கும் வசதிக்காக 13 இடங்களில் ஏறுதளம் மற்றும் இறங்குதளங்கள் அமைக்கப்படு கின்றன.

தற்போது நிலவும் போக்குவரத்து நெரிசலில் மதுரவாயலில் இருந்து துறைமுகத்தை அடைய சுமார் 2 மணி நேரம் வரை ஆகிறது. ஆனால் இந்த உயர்மட்டச் சாலை பயன்பாட்டிற்கு வரும்போது இப்பயணம் வெறும் 25 முதல் 30 நிமிடங்களாகக் குறையும்.

நாளொன்றுக்குச் சுமார் 20,000 உள்ளூர் கார்கள் மற்றும் 5,000-க்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரிகள் இந்தப் பாலத்தைப் பயன்படுத்தும் என மதிப்பிடப்பட்டுள்ளதால் கோயம் பேடு, பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் அண்ணா நகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  சென்னையின் உள்கட்டமைப்பில் ஒரு மிகமுக்கிய மைல்கல்லாக அமையவுள்ளது.

இந்தச் சாலைத் திட்டம்  செயல்பாட்டுக்கு வரும்போது, சென்னை துறைமுகத்தின் செயல்பாட்டுத் திறனைப் பல மடங்கு உயர்த்தும். 2047-ஆம் ஆண்டிற்குள் துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறனை 200 மில்லியன் டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விரைவுச் சாலை அதற்கான முதுகெலும்பாக அமையும்.

இந்த மேம்பால சாலை திட்டம் கடந்த கால  அதிமுக, திமுக ஆட்சியாளர்கள் மற்றும் வழக்குகள் பணிகள்  காரணமாக தாமதமாகி வந்தது. கடந்த திமுக ஆட்சியில், இந்த பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்தொடர்ச்சியாக  தற்போது புதிய வேகமெடுத்துள்ளன. கட்டுமானப் பணிகளைப் பொறுத்த வரை ஆற்றின் குறுக்கே மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் இந்தப் பாலம் அமைக்கப்படுவதால் சில இடங்களில் நவீன ‘கேபிள் ஸ்டேடு’ தொழில்நுட்பம் பயன்படுத்தப் படுகிறது.

தற்போது பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் கூவம் ஆற்றின் கரையோரங்களில் தூண்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் இரவு நேரங்களில் கூடுதல் பணியாளர்கள் மற்றும் இயந்திரங்கள் கொண்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.   நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை 2027-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் முழுமையாக நிறைவு செய்து மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இத்ந நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய துறைமுகம் தலைவர்கள்,  கடந்த நிதி​யாண்​டில், இரு துறை​முகங்​களும் இணைந்து மொத்​த​மாக 107 மில்​லியன் டன் சரக்​கு​களைக் கையாண்டு புதிய சாதனையை படைத்​துள்​ளன. இதில் சென்னை துறைமுகம் 57.9 மில்​லியன் டன் சரக்​கு​களை​யும், காம​ராஜர் துறைமுகம் 49.08 மில்​லியன் டன் சரக்​கு​களை​யும் கையாண்​டுள்​ளன. இரு துறை​முகங்​களின் ஒருங்​கிணைந்த செயல்​பாட்டு வரு​வாய் ரூ.2,400 கோடியை கடந்​துள்​ளது. இரு துறை​முகங்​களின் மூலதன செல​வின​மும் ஆயிரம் கோடி​யாக உயர்ந்​துள்​ளது.

இதில் சென்னை துறை​முகம் கடந்த நிதி​யாண்​டில் ரூ.1,185 கோடி செயல்​பாட்டு வரு​வாயை ஈட்​டி​யுள்​ளதுடன், துறை​முக வரலாற்​றிலேயே மிக அதிபட்​ச​மாக ரூ.434.29 கோடி நிகர உபரி வரு​வாயை பதிவு செய்​துள்​ளது.

காம​ராஜர் துறை​முகம் கடந்த நிதி​யாண்​டில் ரூ.1,239 கோடி செயல்​பாட்டு வரு​வாயை ஈட்​டியதுடன், நாட்​டின் முன்​னணி துறை​முகங்​களி​லேயே மிகக் குறைந்த இயக்க சதவீத​மாக 25.48 சதவீதத்தை பதிவு செய்​திருக்​கிறது.

இதே​போல் துறை​முகத்​தின் வட்​டி, வரி மற்​றும் தேய்​மானத்​துக்கு முந்​தைய வரு​வாய் (எபிட்​டா) வரலாற்​றிலேயே முதன்​முறை​யாக ஆயிரம் கோடி ரூபாயை கடந்து ரூ.1,071.63 கோடி​யாக உயர்ந்​துள்​ளது.

சென்னை துறை​முகத்​துக்கு செல்​லும் கனரக சரக்கு வாக​னங்​களுக்​காக பிரத்​யேக​மாக துறை​முகம் – மதுர​வாயல் இடையே அமைக்​கப்​பட்டு வரும் மேம்​பாலப் பணி​கள் 2027 நவம்​பர் மாதத்​துக்​குள் முழு​மை​யாக நிறைவடைய நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்டு வரு​கின்​றன.

காம​ராஜர் துறை​முகத்​தில் பெரிய கப்​பல்​களைக் கையாளுவதற்கு ஏது​வாக ரூ.440 கோடி மதிப்​பில் 6-வது கட்ட ஆழ்​கடல் தூர்​வாரும் பணி​கள் வெற்​றிகர​மாக முடிக்​கப்​பட்​டுள்​ளன. இதனால் 2.44 லட்​சம் டன் சரக்கு கொள்​ளளவு கொண்ட மிகப்​பெரிய கப்​பல்​களை​யும் தற்​போது கையாள முடிகிறது. இதற்​கிடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்​பீட்​டில் செயல்​படுத்​தப்​பட​வுள்ள சென்னை துறை​முகத்​தின் ‘அவுட்​டர் ஹார்​பர் ப்ராஜெக்ட்’ தொடர்​பாக ‘ரைட்​ஸ்’ நிறு​வனம் போக்​கு​வரத்து ஆய்​வு​களை மேற்​கொண்டு வரு​கிறது.

செங்​கடல் பகு​தி​யில் நில​வும் சர்​வ​தேச பதற்​றங்​கள் மற்​றும் ஈரான்​-அமெரிக்கா இடையே​யான பிரச்​சினை​கள் காரண​மாகக் கச்சா எண்​ணெய் இறக்​கும​தி​யில் தொடக்​கத்​தில் சில சவால்​கள் இருந்​தா​லும், தற்​போது மாற்று வழிகள் மூலம் அவை சீரமைக்​கப்​பட்​டு​விட்​டன.

எனினும் இங்​கிருந்து வளை​குடா நாடு​களுக்கு அனுப்​பப்​படும் வாக​னங்​கள் ஏற்​றும​தி​யில் 6 முதல் 7 லட்​சம் டன் வரை பாதிப்பு ஏற்​பட்​டுள்​ளது. இதனை எதிர்​கொள்ள ஏற்​றும​தி​யாளர்​களுக்​குக் கூடு​தல் சேமிப்​புக் கிடங்கு வசதி​கள் மற்​றும் கட்​ட​ணச் சலுகைகள் வழங்​கப்​பட்​டு வரு​கின்​றன.

இவ்​வாறு​ கூறினார்​.

[youtube-feed feed=1]