கோயம்புத்தூர்: கோவையில் 10வயது  சிறுமி கொலை வழக்கில்  இந்த கொடூர குற்றத்தை செய்ததாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

விசரணையில்,  குற்றவாளி கார்த்திக் சிறுமி காணாமல் போன நிலையில், சிறுமியின் பெற்றோருடன் சேர்ந்து தேடியது போல் நடித்து ஏமாற்றியது தெரிய வந்துள்ளது.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான  தவெக ஆட்சி அமைந்தது முதல் போதை கலாச்சாரம், பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களை இரும்புகரம் கொண்டுஒடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது  மேலும்,  பெண்கள் பாதுகாப்பிற்காக,  மறைந்த ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டிருந்த, காவல்துறை பெண்கள் அதிரடி படையைப் போல,   தற்போது  பவானீஸ்வரி ஐபிஎஸ் தலைமையில்  சிங்கப்பெண் அதிரடிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.   இந்த  காவல்துறையினர்  தமிழகம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்  கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி,  சம்பவத்தன்று  மாலை வீட்டிற்கு அருகே விளையாடிக்கொண்டிருந்துள்ளார். நீண்ட நேரமாகியும் அந்த சிறுமி வீட்டிற்கு திரும்பாத காரணத்தால் பெற்றோர் மற்றும் சிறுமியின் உறவினர்கள் சிறுமியை அருகில் உள்ள பகுதியில் தேடியுள்ளனர். மேலும்,   கோவை சூலூர் காவல் நிலையத்தில் சிறுமி காணாமல் போனது தொடர்பாக புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த, காணாமல் போன சிறுமியை தேடி வந்தனர். போலீசார் விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில், வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கண்ணம்பாளையம் என்ற பகுதியில் சிறுமி ஒருவருவரின் உடல் கிடைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்து, குளத்தில் வீசிவிட்டு சென்ற கொடூரம் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியின் உடலை கைப்பற்றி மருத்துவமனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதையடுத்து, இதை கொலை வழக்காமாக மாற்றி காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர்.  அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டும், மேலும் சிறுமி விளையாடிய பகுதியில் உள்ள மற்ற சிறுவர்கள், மொபைல் டவர் மூலமாகவும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இதனையடுத்து சந்தேகத்துக்குரிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்திய நிலையில்,  சிறுமியை இந்த 2 பேர்தான் அழைத்து சென்றதாக சிறுமியோடு விளையாடிய மற்ற சிறுவர்கள் காட்டிக்கொடுத்தாக கூறப்படுகிறது.

இதனையடுத்து கோவை சிறுமி கொலை வழக்கில்  நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த தற்போது சூலூர் பள்ளபாளையம் பகுதியில்  வசித்து வரும் கார்த்தி (33) என்பவனையும், அவனுக்கு உதவியதாக மோகன்ராஜூம் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கார்திக் கொலை செய்யப்பட்ட சிறுமியின் வீட்டின் அருகில் வசித்து வந்ததும், சிறுமி காணமல் போன நிலையில், சிறுமியின் பெற்றோருடன் சேர்ந்து கார்த்திக்கும் சிறுமியை தேடியது போல நடித்து நாடகமாடியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றதாக கூறப்படும் நிலையில் குற்றவாளி கார்த்திக்கின் கால் எலும்பு முறிந்துள்ளது. கோவை சிறுமி கொலையில் கைதான மோகன்ராஜை மே 27 வரை சிறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மற்றொரு கைதி கார்த்தி கால் முறிந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..

ருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரைச் சுற்றி இருபதுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஏ மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது,. ம் அவசர நிலை அல்லது சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றம் குறித்த கூடுதல் தகவல்களை சேகரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

[youtube-feed feed=1]