சென்னை:  சென்னை மாநகர போலீஸ் காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்ட, முனைவர் திரு. A.அமல்ராஜ், இ.கா.ப., காவல்துறை கூடுதல் இயக்குநர் அவர்கள் இன்று (22.05.2026) காலை வேப்பேரி, காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். 
தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையலான  புதிய அரசு  பதவி ஏற்றது முதல், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு வருவதுடன், பல்வேறு முக்கிய பொறுப்புகளிலும் புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
.இதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகர காவல் ஆணையராக  அருண் தேர்தல் நேரத்தில் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு, அபின் தினேஷ் மோதக்,  நியமனம் செய்யப்பட்டிருந்து.
இந்த நிலையில், முனைவர் அமல்ராஜை  சென்னை மாநகர காவல் ஆணையராக நியமித்து வியாழக்கிழமை (மே 21)  தமிழக அரசு உத்தரவிட்டது.
 முன்னதாக அமல்ராஜ், தாம்பரம் காவல் ஆணையராக பணியாற்றி வந்த  நிலையில்,  கடந்த ஏப்ரலில் அந்தப் பதவியில் இருந்து மாற்றப்பட்டு கட்டாய காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தாா். அவரை சென்னை மாநகர காவல் ஆணையராக தமிழ்நாடு அரசு நியமனம் செய்தது.
இதையடுத்து இன்று  காலை,  சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வருகை தந்த அமல்ராஜ், காவல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக, காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்
.சென்னை மாநகரக் காவல் ஆணையராக இருந்த அபின் தினேஷ் மோதக், சிபிசிஐடியின் கூடுதல் காவல்துறை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]