சென்னை: முதல்வர் விஜய்க்கு ஆலோசனைகள் வழங்க இரண்டு ஆலோசகர்களை நியமனம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

மாநில முதல்வருக்கு ஆலேசானை வழங்க, தலைமைச்செயலாளர் உள்பட ஏராளமான ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ள நிலையில், தனது தவெக கட்சியின் வியூக வகுப்பாளராக செயல்பட்டு வந்த ஜான் ஆரோக்கியசாமி முதலமைச்சரின் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அதுபோல, பொது விவகாரங்கள் ஆலோசகராக விஷ்ணு ரெட்டி நியமனம் செய்யப்ப்டடுள்ளார்.
.தமிழக வெற்றிக் கழகம் தொடங்கியதில் இருந்தே அக்கட்சியின் அரசியல் வியூக வகுப்பாளராக செயல்பட்டு வரும் ஜான் ஆரோக்கியசாமி, தேர்தல் வியூகம் முதல் அமைச்சரவை தேர்வு முதல் முக்கிய பங்காற்றியுள்ளார்.இதேபோல், விஜய்யின் நண்பரும், தொழிலதிபருமான விஷ்ணு ரெட்டியை முதல்வரின் பொது விவகாரங்களுக்கான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர், முதல்வர் விஜய்யின் சிறுவயது நண்பர் என்று கூறப்படுகிறது.
விஷ்ணுரெட்டி, ஆளுநம் மாளிகைக்கு ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி கடிதம் வழங்க சென்றபோதுகூட உடனிருந்தார். இவர்கள் இருவருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு நிகரான சிறப்பு ஆலோசகர்கள் பதவி வழங்கியதற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
தனி நபர்களை அரசு இயந்திரத்தில் விஜய் இணைந்துள்ளதற்கு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.ஏற்கெனவே, முதல்வர் விஜய்யின் தனிப்பட்ட ஜோதிடரும், தவெக செய்தித் தொடர்பாளருமான ரத்தன் பண்டிட்டை ஆலோசகராக நியமித்ததற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அந்த நியமனத்தை தமிழக அரசு திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]