சென்னை: கடந்த திமுக ஆட்சியில் தமிழக மின்சார வாரியத்தில் முந்தைய திமுக ஆட்சி காலத்தில் பல்வேறு கொள்முதல் மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக அறிவிக்கப்பட்டிருந்த சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர்களை புதிய தவெக அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது.
இந்த டெண்டரில், மின்வாரிய திட்டங்களுக்கான சல் செலவை விட பல மடங்கு கூடுதலாக மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிக்கச் சதி நடந்தது தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்தே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அறப்போர் புகார் கொடுத்த ரூ 397 கோடி டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழலில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் இருந்து டெண்டர் செட்டிங் வேலை செய்த பைனான்சியல் கண்ட்ரோலர் காசி பணி இடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது மின் வாரியத்தின் ரூ.2000 கோடி மதிப்பிலான டென்டர் ரத்து செய்யப்பட்டு ள்ளது. தற்போதைய மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் அவர்களின் உத்தரவின்படி ரத்து செய்யப்பட்டுள்ளது,
தமிழக மின்சாரத்துறை அமைச்சர், டிசம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையே தோராயமாக ₹2,000 கோடி மதிப்பிலான 100 TANGEDCO டெண்டர்களை ரத்து செய்தார். முந்தைய ஆட்சியில் இருந்த பல டெண்டர் அறிவிப்புகள் அவற்றின் அசல் மதிப்பீட்டை விட அதிக விலையில் வெளியிடப்பட்டதாக அதிகாரிகள் மதிப்பாய்வின்போது பெரிய முரண்பாடுகள் மற்றும் சட்ட விரோதங்களைக் கண்டறிந்தனர்.
டிசம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் வெளியிடப்பட்டிருந்த ஒப்பந்த அறிவிப்புகளை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அவற்றில் பெரும் முரண்பாடுகளையும் சட்டவிரோதச் செயல்களையும் கண்டறிந்தனர். முந்தைய ஆட்சியின்போது வெளியிடப்பட்ட பல ஒப்பந்த அறிவிப்புகள், அவற்றின் அசல் மதிப்பீடுகளை விட அதிகமான விலையில் வெளியிடப்பட்டிருந்ததாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இதையடுத்துசுமார் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர்களை அமைச்சர் நிர்மல்குமார் ரத்து செய்து உத்தரவிட்டார். இதில் மிக முக்கிய அம்சமாக, முந்தைய டெண்டர் மதிப்பீட்டு விலையை விட குறைந்தது 30 சதவீதம் குறைவாக விலைப்புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம், முந்தைய ஆட்சியாளர்களின் கமிஷன் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான சாமானிய மக்களின் வரிப்பணம் முறைகேடாக வீணடிக்கப்படுவது முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட்டுச் சேமிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மின் கம்பிகள், மின்மாற்றிகள் மற்றும் மின் கம்பங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய மின் சாதனங்களை கொள்முதல் செய்வதற்கான புதிய ஒப்பந்த அறிவிப்புகளைத் தயாரிக்கும் பணியை வாரியம் தொடங்கியுள்ளது.
மின்சார வாரியத்தில் நிலவி வந்த புரையோடி போன ஊழல் முறைகேடுகளை பத்தே நாட்களில் அதிரடியாக கண்டுபிடித்து, வெளிப்படைத்தன்மையுடன் கூடிய மறுடெண்டர் மூலம் மக்கள் பணத்தைக் காப்பாற்றிய மாண்புமிகு அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் அவர்களுக்குச் சென்னை மற்றும் தமிழகப் பொதுமக்கள் தங்களின் நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
[youtube-feed feed=1]