சென்னை: தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில்  10ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுகான தேர்வு முடிவுகள் வெளியானது.  இந்த தேர்வில் 94.31% தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சியில் சிவகங்கை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

2025-26ம் கல்வியா 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியிருந்தனர். இந்நிலையில், இன்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ரிசல்ட்டை வெளியிட்டிருக்கிறார்.  இந்த தேர்வில் மொத்தம் 94.31% தேர்ச்சி விகிதம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மொத்தம் 9 லட்சம் பேர் எழுதிய 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 8,21,105 (94.31 சதவீதம்) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைபோலவே இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 92.15 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 96.47 சதவீதம் மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணாக்கர்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in இணையதளங்களில் முடிவுகளை அறியலாம். இணையதள முகவரிகளில் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

இதுதவிர, பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த செல்போன் எண்ணிற்கும், தனித் தேர்வர்கள் தாங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய செல்போன் எண்ணிற்கும் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

பாட வாரியாக தேர்ச்சி விகிதம்:

தமிழ் – 98.43%
ஆங்கிலம் – 99.44%
கணிதம் – 97.36%
அறிவியல் – 98%
சமூக அறிவியல் – 97.93%

அதே நேரம் தமிழ் பாடத்தில் 34 பேரும், ஆங்கிலத்தில் பேரும் 92, கணிதத்தில் 3,194 பேரும், அறிவியல் பாடத்தில் 10,476 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 3,336 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்று உள்ளனர். ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 17,132. ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 2,774 ஆகும்.

முதல் 5 மாவட்டங்களை பொறுத்தவரை, புதுக்கோட்டை முதலிடத்திலும், சிவகங்கை 2ம் இடத்திலும், தஞ்சாவூர் 3வது, திருச்சி 4வது, கன்னியாகுமரி 5வது இடமும் பிடித்திருக்கிறது.

இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் க.சசிகலா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், “www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, results.digilocker.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் தங்கள் பதிவெண், பிறந்ததேதி ஆகியவற்றைப் பதிவு செய்து அறிந்து கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

[youtube-feed feed=1]