வீடுகளில் மாடியில் சோலார் பேனல் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசின் மானியத்துடன் கூடுதலாக தமிழக அரசும் மானியம் வழங்க உள்ளது.
மத்திய அரசின் ‘பிஎம் சூர்ய கர்’ திட்டத்தின் கீழ் 3 கிலோவாட் சோலார் அமைப்புக்கு ரூ.78,000 வரை மானியம் வழங்கப்படுகிறது. இதனுடன் தமிழக அரசு ரூ.22,000 வழங்குவதால், மொத்த மானியம் ரூ.1 லட்சமாக கிடைக்கும்.

எவ்வளவு மானியம்?
🔹 1 கிலோவாட் – மத்திய அரசு ரூ.30,000 + தமிழக அரசு ரூ.5,000
🔹 2 கிலோவாட் – மத்திய அரசு ரூ.60,000 + தமிழக அரசு ரூ.10,000
🔹 3 கிலோவாட் – மத்திய அரசு ரூ.78,000 + தமிழக அரசு ரூ.22,000
இந்தத் திட்டத்தின் மூலம் 2027 மார்ச் மாதத்துக்குள் 1 லட்சம் வீடுகளுக்கு மானியம் வழங்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 2026 முதல் சோலார் அமைக்க விண்ணப்பித்தவர்களும் தமிழக அரசின் மானியத்தைப் பெற தகுதியானவர்கள்.
தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை (TEDA), மத்திய அரசின் இணையதளத்தில் இருந்து பயனாளிகளின் விவரங்களைப் பெற்று, சோலார் அமைப்பு செயல்பாட்டுக்கு வந்த பிறகு தமிழக அரசின் மானியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தும். இதற்காக தனியாக விண்ணப்பிக்க தேவையில்லை.
ஒரு கிலோவாட் சோலார் பேனல் மூலம் தினமும் சுமார் 5 யூனிட் வரை மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். உற்பத்தியாகும் மின்சாரம் மின் கட்டமைப்பில் செலுத்தப்பட்டு, பயன்படுத்தும் மின்சாரத்துக்கு ஏற்ப கணக்கிடப்படும்.