சென்னை: விஜய் தலைவர் விஜய், ஏற்கனவே கொடுத்துள்ள வாக்குறுதிகளின்படி, ‘6 இலவச சிலிண்டர்கள்’ வழங்க ஈரானை கைபற்ற வேண்டும் என சென்னையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கடுமையாக விமர்சனம் செய்தார்.
மேலும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2031 சட்டமன்றத் தேர்தல் என அனைத்திலும் நாம் தமிழர் கட்சி வழக்கம் போல் தனித்தே போட்டியிடும் என சீமான் கூறியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் பொதுக்கூட்டங்களை தமிழக அரசியல் கட்சிகள் நடத்தி வருகின்றன. அதாவது கடந்த 2009 ஆம் ஆண்டு இந்தியாவில் காங்கிரஸ் அரசும், தமிழ்நாட்டில் கருணாநிதி தலைமையிலான திமுக அரசும் இருந்த வேளையில், இலங்கை முள்ளிவாய்க்கால் பகுதியில் ஈழத்தமிழர் படுகொலை அரங்கேறியது. இதற்கு காங்கிரஸ் அரசும் அதன் கூட்டணியில் இருந்த திமுக அரசும் துணைபோனது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இந்த இனப்படுகொலை நடைபெற்ற ஈழத்தமிழர் இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில், அரசியல் கட்சிகள் மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நினைவேந்தல் கூட்டம் மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்று வருகின்றது.
அதன்படி, மே 18ம் நாள் நாம் தமிழர் கட்சி சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகரில் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துக் கொண்டார்.
பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், மாநிலத்தில் 10 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பதாக இப்போது பேசுகிறார்கள். அது தெரியாமல்தான் ஆட்சிக்கு வந்தீர்களா? என முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார்.
“காற்றடித்தால் பறந்து போவதற்கு நாம் சருகல்ல. புயலே அடித்தாலும், இடியே இடித்தாலும் இதே இடத்தில் நிலைத்து நிற்போம். நாங்கள் விழுந்த இடத்திலிருந்துதான் எழுவோம். எத்தனை முறை விழுந்தாலும், எங்களால் மீண்டும் எழுந்துவிட முடியும். தோல்விகள் எங்களை முடக்காது. ஒவ்வொரு தோல்வியும் நமக்கு ஒவ்வொரு முன்னேற்றத்தைத் தந்து கொண்டிருக்கிறது. நாம் ஏந்தியுள்ள தத்துவம் நிலையானது.

சரணடைந்து வாழ்வதைவிட, சண்டையிட்டுச் சாவதே மேல், எனக்குத் தேவை. விடுதலை மட்டுமே என களத்தில் தலையை சாய்த்தவன் பிரபாகரன். உலக வரலாற்றில் எத்தனையோ விடுதலை இயக்கங்கள் இருக்கலாம். ஆனால், எதற்கும் தயாராக களத்தில் இறங்கிய இனம் நம் தமிழ் இனம். ஈழம் என்பது வெறும் மூன்றெழுத்துச் சொல் அல்ல, அது தமிழ் தேசியத்தின் விடுதலை.
2008, 2009 ஆம் ஆண்டுகளில் கொத்துக் கொத்தாக நமது மக்கள், சரணடைந்த நிலையிலும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதை எந்த நாடும் கேட்கவில்லை. சேவலை போல கூவிக் கொண்டிருக்கிறோம், இருப்பினும் இந்த அதிகார வர்க்கம் கேட்காத நிலையிலேயே உள்ளது.
தமிழ்நாட்டிற்கு ரூ 10 லட்சம் கோடி கடன் உள்ளது. இதற்கு வட்டி கட்டவே ரூ.5 லட்சம் கோடி செலவாகும். நிதிச்சுமை இப்படி இருக்கும் நிலையில் இலவசங்களையும், 6 இலவச சிலிண்டர்களையும் எப்படி கொடுக்க முடியும்? ஈராக், ஈரானைக் கைப்பற்றினால் மட்டுமே அது சாத்தியம். படித்த இளைஞர்களுக்கு ரூ. 4 ஆயிரம் கொடுப்பதாக் கூறிவிட்டு, இப்போது கடன் அதிகமாக இருப்பதாக கூறுகிறார்கள்.
தோல்வியும், அவமானமும் திமுக-விற்கு வந்தது எனக்கு மகிழ்ச்சியே. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மணல் கொள்ளை, கல்குவாரி கல்வி, வியாபாரம், மருத்துவ வியாபாரம் எதையும் செய்ய விடமாட்டான் என்று முந்தைய ஆட்சியாளர்கள் பயப்படுகிறார்கள். நான் 5 விழுக்காடு மக்களுக்கானவன் அல்ல, 95 விழுக்காடு உழைக்கும் மக்களுக்கானவன்.

தேர்தல் தோல்வியைக் கண்டு நாங்கள் துவண்டு போக மாட்டோம். எங்களுக்கு இருப்பது வயிற்றுப் பசி அல்ல, சுதந்திரப் பசி. 2019 மே 18 இதே நாளில் நம் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. இலக்கிற்கான பயண தூரம் சற்று அதிகமாக உள்ளது. நம் மக்கள் நமது அரசியலைப் புரிந்து கொள்ள இன்னும் 25 ஆண்டுகள் ஆகும். அவர்களுக்குத் தேவை கருத்தல்ல, கவர்ச்சிதான்.
வேட்பாளர் யார் என்று தெரியாமல், அவர் படித்தவரா? வேலை செய்வாரா? என்றுகூட பார்க்காமல் வாக்களிக்கும் சூழல் தான் உள்ளது. விதையை விதைக்கிறேன், ஆனால் முளைக்கவில்லை. மீண்டும் மீண்டும் உழுது விதைத்துக் கொண்டே இருப்பேன். நம்மிடம் உண்மை, நேர்மை உள்ளது. நம்பிக்கையோடு உழைப்போம்.
15 ஆண்டுகாலமாக இந்த மண்ணிற்காகப் போராடி வருகிறேன். விடுதலை நெருப்பை அணையவிடாமல் பற்ற வையுங்கள். நாம் இறுதிச் சுற்று ஓட்டத்தைத் தொடங்கியுள்ளோம். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2031 சட்டமன்றத் தேர்தல் என அனைத்திலும் நாம் தமிழர் கட்சி வழக்கம் போல் தனித்தே போட்டியிடும்” .
இவ்வாறு பேசினார்.
[youtube-feed feed=1]