சென்னை: அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சுவையான உணவுகளை வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த கடந்த 2013ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் முதன்முதலில் சென்னையில் அம்மா உணவுகம் தொடங்கப் பட்டது . குறைந்த விலையில் உணவு வழங்கப்படும் இந்த உணவகம் மக்களிடைய பெரும் வரவேற்பு கிடைத்ததால், மாநிலம் முழுவதும் மருத்துவமனைகள் உள்பட பல இடங்களில் அமைக்கப்பட்டு, ஏழை எளிய மக்களின் பசி போக்கப்பட்டது. ஏழை மக்களின் அமுத சுரபியாக விளங்கி வருகிறது.

அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் சுடச்சுட உணவுகள் கிடைப்பதுடன் மலிவு விலையில் உணவுகள் கிடைப்பதே சிறப்பு. காலையில், மதியம், மாலை என மூன்று வேளைகளிலும் உணவுகள் வழங்கப்படுகிறது. இட்லி ரூபாய் 1- க்கும், வெண்பொங்கல் ரூபாய் 5- க்கும், தயிர் சாதம் ரூபாய் 3- க்கும், மற்ற கலவை சாதங்கள் ரூபாய் 5- க்கும், சாம்பாரும் கூடிய இரண்டு சப்பாத்தி ரூபாய் 3- க்கும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அம்மா உணவகங்கள் கடந்த திமுக ஆட்சியில் போதிய பராமரிப்பு இன்றியும், முறையான உணவு வழங்காமலும் இருந்தால், ஏழை மக்களிடையே அதிருப்தி நிலவியது.
இந்த நிலையில், முதல்வர் விஜய் அம்மா உணவங்களை மேம்படுத்தி சுவையான உணவு வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் தற்போது பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் 383 அம்மா உணவகங்களும், மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள் மூலமாக 237 அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன.
உணவு சமீப காலங்களில் இவ்வுணவகத்தில் அளிக்கப்படும் வகைகளின் தரம் மற்றும் சுவை திருப்திகரமாக இல்லை என்று தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உரிய அரசுத் துறை செயலாளர்களுடன் கலந்தாலோசித்து, அம்மா உணவகங்களுக்கு தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துமாறும், சமையல் உபகரணங்களை உடனடியாகக் கொள்முதல் செய்யுமாறும், சுவையுடன் கூடிய தரமான உணவு வகைகளை தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு வழங்கவும் ஆணையிட்டுள்ளார்.
இந்த மறுசீரமைப்பிற்கும், பொருட்கள் கொள்முதல் செய்வதற்கும் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் பொது நிதியிலிருந்து செலவினங்களை மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.”
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]