சென்னை: மாநகராட்சி ஆணையர் குமரகுரு, மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான, பி.அமுதா, ககன்தீப் சிங் பேடி சத்யபிரதா சாகு உள்பட 17 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் உள்பட 17 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ளஅரசாணையின்படி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பணியாற்றி வந்த ககன்தீப் சிங் பேடி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் சத்யபிரதா சாகு, நீர்வளத் துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் சுக்சோங்கம் ஜடக் சிரு, பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் இயற்கை வளங்கள் துறையின் முதன்மைச் செயலாளராகவும் பணியாற்றுவார்.
தமிழ்நாடு கனிமவள மேலாண்மை இயக்குநர் அனில் மேஷ்ராம், எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் வள்ளலார், போக்குவரத்துத் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் பழனிசாமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை, உழவர் நலத் துறை செயலாளர் தக்ஷிணாமூர்த்தி, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
திட்டம் மற்றும் மேம்பாட்டுத் துறை செயலாளர் ஷஜன்சிங் சவுகான், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
நிதித்துறை செயலாளர் (செலவினம்) பிரசாந்த் வாட்நேர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
நிதித்துறை சிறப்பு செயலாளர் அருண் சுந்தர் தயாளன், பதிவுத்துறை ஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் முதலமைச்சரின் இணைச் செயலாளர் லட்சுமிபதி, நிதித்துறை இணைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை ஆணையர் ஆனந்த், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்தின் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை இயக்குநர் ராகுல்நாத், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் சமீரன், பெருநகர் சென்னை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் துணை முதலமைச்சரின் கூடுதல் செயலாளர் ஆர்த்தி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
பதிவுத்துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளள்/
இவ்வாறு தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]