திருவனந்தபுரம்: கேரள மாநில முதல்வராக சதீசன் பதவி ஏற்றார் அவருடன் காங்கிரஸ் தலைவர் சென்னிதலா உள்பட 20 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர்.
புதிய முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு மாநில கவர்னர் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கேரள முதல்வராக காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் வி.டி.சதீஷன், இன்று பதவியேற்க உள்ளார். அவருடன், அக்கட்சியின் மூத்தத் தலைவர்கள் ரமேஷ் சென்னிதலா, கே.முரளீதரன், சன்னி ஜோசப் உட்பட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 20 அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.
140 தொகுதிகளைக்கொண்ட சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 9ம் தேதி நடந்தது. மொத்தம் உள்ள 140 தொகுதி களில், 102ல் வெற்றி பெற்று, காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சியை பிடித்தது. முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூ., தலைமையிலான இடது ஜனநாய க முன்னணி கூட்டணி தோல்வியடைந்து, ஆட்சியை இழந்தது.

இதையடுத்து, காங்., கூட்டணி சார்பில் முதல்வராக பொறுப்பேற்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்தது. காங்., மூத்த தலைவர்களான வேணுகோபால், சதீஷன் மற்றும் ரமேஷ் சென்னிதலா இடையே கடும் போட்டி நிலவியதால், முடி வு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இதையடத்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்., பார்லிமென்ட் குழு தலைவர் சோனியா, லோக்சபா எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் ஆகியோர் கேரள எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் தீவிரமாக நடத்திய ஆலோசனைகளுக்கு பின், சதீஷனின் பெயர் இறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, காங்., மூத்தத் தலைவர் சதீஷன் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு இன்று பதவியேற்றது.
திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய மைதானத்தில் இன்று காலை 10:00 மணிக்கு பதவி ஏற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.
பதவியேற்பு விழாவில், வி.டி.சதீஷனுக்கு, கேரள கவர்னர் அர்லேக்கர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். காங்கிரஸ் அமைச்சரவை6யில் IUML கட்சியை சேர்ந்த 5 பேரும், கூட்டணி கட்சியை சேர்ந்த 4 பேரும் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். இதையடுத்து, 21 பேர் கொண்ட அமைச்சரவை பதவி ஏற்றுள்ளது.
இந்த பதவி ஏற்பு விழாவில் கார்கே, ராகுல் காந்தி கர்நாடகா, தெலுங்கானா, இமாச்சல பிரதேச மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் தலைவர் சென்னிதலா தனக்க உள்துறை அமைச்சகம் ஒதுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Full list of Kerala Cabinet Ministers
- VD Satheesan (CM)
- Ramesh Chennithala
- PK Kunhalikutty
- Sunny Joseph
- K Muraleedharan
- Mons Joseph
- Shibu Baby John
- Anoop Jacob
- CP John
- AP Anil Kumar
- N Samsudheen
- PC Vishnunath
- Roji M John
- Bindu Krishna
- M Liju
- KM Shaji
- PK Basheer
- VE Abdul Gafoor
- T Siddique
- KA Thulasi
- OJ Janeesh