சென்னை: விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு சட்டப்பேரவையில்   ஆதரவு வழங்கி  அதிமுக மூத்த தலைவர்களான, எஸ்.பி.வேலுமணி ‘சி.வி.சண்முகம் உள்பட அதிமுக நிர்வாகிகளின் கட்சி பதவியை அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி பறித்து நடவடிக்கைஎடுத்துள்ளார்.

 

தமிழக சட்டப்பேரவையில்  நேற்று மே 13) நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், சி.வி. சண்முகம் உள்ளிட்ட அதிமுகவின் 25 சட்டப்பேரவை உறுப்பினர்கள், “விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம்” என்று தெரிவித்த னர். ஆனால், அவையில் பேசிய  எடப்பாடி பழனிசாமி, தனது கட்சிஎம்எல்ஏக்கள்   47 பேரும் தவெக அரசை எதிர்த்துதான் வாக்களிப்பார்கள்.” என்று கூறியிருந்தார். ஆனால், எஸ்பி வேலுமணி, உங்ளபட 25 அதிமுக எம்எல்ஏக்கள் விஜய் அரசுக்கு ஆதரவாக பேரவையில் வாக்களித்தனர். இதனால், தவெக 144 வாக்குகள் பெற்று பெரும்பான்மையை நிறைவேற்றியது.

இந்த நிலையில், எஸ்.பி. வேலுமணி,  தவெகவுக்கு ஆதரவு வழங்கி25 எம்எல்ஏக்களின் பதவிகளை அதிமுக தலைமை பறித்து நடவக்கை எடுத்துள்ளது.

இதுதொடர்பாக  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், கட்சிககு எதிரான நிலைப்பாட்டை எடுத்த நிலையில், நத்தம் இரா. விசுவநாதன், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி. விஜயபாஸ்கர் காமராஜ் ஆகிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்பட பலரின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]