சென்னை: தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடைகளில், 21 வயது உட்பட்டவர்களுக்கு மது விற்கக் கூடாது என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு தமிழ்நாடுஅரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து,  21 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கே மது விற்க வேண்டும் ,  சந்தேகம் இருந்தால் மது வாங்க வருப வரின் ஆதாரை செக் செய்ய வேண்டும் மது விற்பனை நிலையங்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

இதுதொடர்பாக டாஸ்மாக் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் விதிகள் 2003 விதி எண் 11A -ன் படி 21-வயதிற்குட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளரின் வயதில் சந்தேகம் ஏற்பட்டால் அவர்களிடம் வயதிற்கான ஆதாரமான ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் போன்ற ஏதேனும் உரிய ஆவணங்களை சரிபார்த்து 21-வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே மதுபானங்களை விற்பனை செய்யப்பட வேண்டும்.

மேலும் 21 வயதிற்கு கீழ் உள்ள வாடிக்கையாளருக்கு மதுபானங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது”.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]