சென்னை: தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப் படாத நிலையில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேர்க்கை பெற மாணவர்கள் நாளை (மே 7) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், 2026-27 கல்வி ஆண்டு உயர்கல்வி சேர்க்கைக்கான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்பு மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பம் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில், நாளை முதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்குஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குனநகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026-27 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 7.5.2026 முதல் 29.5.2026 வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre – AFC) மூலம் விண்ணப்பிக்கலாம்.
2026-2027ம் கல்வியாண்டில், தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவு களில் 1,26,959 ( Shift – I – 101022/ Shift – II – 25937) சேர்க்கை இடங்கள் உள்ளன. மாணவர்கள் தாங்கள் விருப்பப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விருப்பப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்க லாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ தகவலின்படி, மாணவர்கள் http://www.tngasa.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதற்கான கட்டணமாக ஒரு மாணவருக்கு ரூ.48 மற்றும் பதிவுக் கட்டணமாக ரூ.2 மட்டும் வசூலிக்கப்படுகிறது. எஸ்சி/எஸ்டி பிரிவு மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. பதிவுக் கட்டணம் ரூ.2 மட்டும் செலுத்த வேண்டும். கட்டணத்தை இணையதளம் வாயிலாகச் செலுத்தும் வசதியும் உள்ளது.
மாணவர் சேர்க்கை வழிகாட்டுதல் தொடர்பான விவரங்களை இணையதளம் மூலமாக அறிந்துகொள்ளலாம். மேலும், சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் செயல்படும் உதவி மையத்தைத் திங்கள் முதல் வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையும் 044 -24343100 / 24342011 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]