சென்னை:  தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு பணியில் இருந்த சென்னை மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் ஒருவர், விஜய் நடித்த ஜனநாயகன் படத்தை தனது லேப்டாப்பில் ரசித்துகொண்டிருத்து தெரிய வந்த நிலையில், அவரை காவல்துறையினர் கைது செய்து செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 23ந்தேதி வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை மே 4ந்தேதி நடைபெற உள்ளது. இதனால், வாக்குப்பெட்கள் ஸ்டிராங் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.  இதற்காக தமிழகம் முழுவதும் 62 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்குப்பெட்டி இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.  24 மணி நேரமும் வாக்குப்பெட்டியை கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் சுழற்சி முறையில் வேட்பாளர்களுக்கான எஜென்டுகள் பணியில் உள்ளனர்.  மேலும் 3 அடுக்கு காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையின்  சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்து கொண்டு தனது லேப்டாப்பில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் பார்த்ததோடு அதனை புகைப்படமாக எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்ட சிசிடிவி டெக்னிக்கல் தலைமை அதிகாரியை போலீசார் கைது செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கைக்காக 3 மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அதில் தென் சென்னை தொகுதிக்குட்பட்ட  சைதாப்பேட்டை, தி நகர், விருகம்பாக்கம், வேளச்சேரி மற்றும் மயிலாப்பூர் உள்ளிட்ட ஐந்து தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அண்ணா பல்கலைக்கழகம் வாக்கு என்னும் மையத்தில் வைக்கப்பட்டு 24 மணி நேரமும்  கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில்,

அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி கண்காணிப்பு அறையில் தவெக தலைவர் விஜய் ஆதரவாளர் எனக் கூறப்படும் நபர் ஒருவர், சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்து கொண்டு தனது லேப்டாப்பில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்ததுடன், அதனை புகைப்படமாக எடுத்து  ஓட்டு பெட்டி வர இடத்துல கூட நம்ம தளபதி என்ட்ரிதான் சமூகவலை தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த காட்சி சமூகவலைதளத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனையடுத்து  வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள இடத்தில் தேர்தல் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் விதிகள் கடுமையாக அமலில் இருந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் போலீசார் புகார் அனுப்பப்பட்டது.

இதனையடுத்து சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 23 ஆம் தேதி வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த ஸ்ட்ராங் ரூமில்  பணியில் இருந்த யுவராஜ் (36)  என்பவர் சட்ட விரோதமாக ஜனநாயகம் திரைப்படத்தை பார்த்து அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டது. தெரியவந்தது. திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த யுவராஜை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் டெக்னிக்கல் ஹெட்டாக பணியாற்றி வந்துள்ளார்.

இதனையடுத்து கோட்டூர்புரம் போலீசார் யுவராஜை கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திரையரங்கில் வெளியாகுவதற்கு முன்பாக திருட்டு தனமாக வெளியிடப்பட்ட ஜனநாயகன் படத்தை சட்ட விரோதமாக பார்த்தாகவும் வழக்கு பதியப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

[youtube-feed feed=1]