தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவிலில் தவெக வெற்றிபெற வேண்டி விஜய் அதிகாலை சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்து மக்களின் விழாக்களுக்கும், சித்திரை புத்தாண்டுக்கும் வாழ்த்து சொல்ல முன்வராத கிறிஸ்தவரான ஜோசப் விஜய், நடைபெற்றுள்ள தேர்தலில் வெற்றி பெற வேண்டி, திருச்செந்தூர் முருகன் பாதத்தில் சரணடைந்துள்ளார். இது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகப் போற்றப்படும் மிகச் சிறப்பான தலமாகும். தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் கடலோரத்தில் அமைந்துள்ள இந்தத் தலம், சூரபத்மனை வதம் செய்த பிறகு முருகன் தங்கிய இடமாகக் கருதப்படுகிறது. இது மற்ற படை வீடுகளில் இருந்து மாறுபட்டு, கடற்கரையில் அமைந்திருப்பது விசேஷமாகும். இத்தலத்தில் உள்ள முருகனை அதிகாலையில் தரிசித்தால் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற்றப்படும் என்பது ஐதீகம்.
இந்த நிலையில், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டுள்ள விஜயின் த வெக கட்சி, தேர்தலில் வெற்றிபெற வேண்டி, அக்கட்சியின் தலைவரான விஜய் இன்று அதிகாலை திருச்செந்தூரில் முருகனை தரிசித்து ஆசி பெற்றார்.
முன்னதாக, திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்த விஜய்க்கு திரிசுதந்திரர்கள் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
தவெக தலைவர் விஜய், திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு வாக்குகள் பதிவாகி உள்ளதால், வெற்றி பெறப்போகும் கட்சி எது என்பது கணிக்க முடியாத நிலையே உள்ளது. அதனால் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில், நிலையில் தவெக தலைவர் விஜய் இன்று அதிகாலை திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்ற அவர், அங்கிருந்து கார் மூலம் திருச்செந்தூர் வந்தார். பட்டு வேட்டி சட்டை, மேல் துண்டு அணிந்து திருச்செந்தூர் முருகன் கோவிலில் அதிகாலையில் நடந்த விஸ்வரூப தரிசனத்தில் விஜய் பங்கேற்றார். அவருக்கு பூசாரிகள் வேல் உடன் பிரசாரங்களை வழங்கினார்.

திருச்செந்தூர் கோவிலில் அதிகாலை நடைபெறும் விஸ்வரூப தரிசனம் மிகவும் பிரசித்தி பெற்றது. அதிகாலையில் கடவுளை காணும் முதல் தரிசனம் தான் விஸ்வரூப தரிசனம் கடவுள்களுக்கு நடக்கும் நீராட்டுதலைக் குறிக்கும் சொல் திருமஞ்சனம். இந்த திருமஞ்சனத்திற்கு முன்பாகவே அதாவது, முந்தைய தினத்தின் அலங்காரத்தில் கடவுளை தரிசிப்பது தான் விஸ்வரூப தரிசனம். முதல் நாள் இரவில் கோவில் நடை அடைக்கப்பட்டு, மறுநாள் காலையில் நடை திறந்ததும், கருவறையில் திரை விலக்கப்பட்டு நடைபெறுகிற முதல் தரிசனத்தை விஸ்வரூப தரிசனம் என்பர்.
பொதுவாக பக்தர்கள் இறைவனை காண்பது தரிசனம். அதுவே கடவுள் பக்தர்களை பார்ப்பது தான் விஸ்வரூப தரிசனம். இதுவே மற்ற தரிசனத்திற்கும் விஸ்வரூப தரிசனத்திற்கும் உள்ள வித்தியாசம்.
ஐதீகத்தின்படி, காலையில் நடைதிறந்து முதல் முறை தனக்கு முன் இருக்கும் திரை விலக்கப்பட்டதும் தன்னை பார்க்க யார் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்று கடவுள் பார்ப்பார் என்கிறார்கள். கடவுளின் அருள்பார்வை நேரடியாக பக்தர்களின் மீது விழுவது தான் இந்த விஸ்வரூப தரிசனத்தின் சிறப்பு என்கிறது ஐதீகம்.
திருச்செந்தூர் முருகன் கோவிலை பொறுத்தவரை குழந்தையாக இருந்த முருகன் தேவர்களுக்கு விஸ்வரூப தரிசனம் அளித்த செய்தி கந்த புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. சூரபத்மனுக்கும் விஸ்வரூப தரிசனம் தந்த பின்னரே அவனை ஆட்கொண்டு கடவுள் முருகன் அருள்புரிந்தார் என்றும், இந்த தரிசனத்தின்போது முருகனுக்கு சேனை தலைவராக இருந்த வீரபாகு கடவுள் முருகனின் உடலில் பதினான்கு உலகங்களையும் தரிசிக்க முடிந்தது என்பது தான் சொல்லப்படும் புராணம்.
இத்தனை சிறப்புகள் இருப்பதால் தினமும் காலை 5 மணிக்கு திருச்செந்தூர் கோவிலில் நடக்கும் விஸ்வரூப தரிசனம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். திருச்செந்தூரில் விஸ்வரூப தரிசனம் செய்துவிட்டு முருகனிடம் பிரச்சனையை சொல்லி முறையிட்டால் முருகன் கேட்டதற்கும் மேலாக வரங்களை அள்ளிக் கொடுப்பார் என்று சொல்லப்படுவதுண்டு. விஸ்வரூப தரிசனம் செய்தால் வாழ்வில் ஏற்பட்டுள்ள தடைகள் விலகி நல்ல யோகம் ஏற்படும் என்பதும் ஐதீகம்.
தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், எதிரிகளை வீழ்த்தி தேர்தல் முடிவுகள் சாதகமாக அமைய வேண்டி, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், திருச்செந்தூர் முருகன் கோவிலில் சத்ரு சம்ஹார யாகமும் நடத்தப்பட்டது. இதையடுத்து, இன்று தவெக தவெக தலைவர் விஜய் விஸ்வரூப தரிசனத்தில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து, எம்பெருமான் முருகனின் ஆசி பெற்றார்.
திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் தூத்துக்குடி விமான நிலையம் வந்த விஜய் அங்கிருந்து சென்னை திரும்பினார்.
[youtube-feed feed=1]