சென்னை: 16ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவை கலைக்கப்பட்டதாக மாநில ஆளுநர் அர்லேகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஆட்சி காலம் மே 10ந்தேதியுடன் முடிவடைகறிது.இதையடுத்து, புதிய சட்டமன்றம் அமைவதற்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், நடிகர் விஜய் தொடங்கி உள்ள தவெக கட்சி 107 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மாற்று கட்சியினரின் ஆதரவு கோரப்பட்டுள்ளது. இதனால் திரைமறைவு குதிரைபேரம் நடைபெறுகிறது.
இந்த நிலையில், நடப்பில் உள்ள 16ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவை கலைக்கப்பட்டதாக மாநில ஆளுநர் அர்லேகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவை கலைப்பு மே 5-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்ததாக ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
