சென்னை: திமுக ஜெயித்தால் நாங்கள் தான் எதிர்க்கட்சி என்று கூறுகிறார் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறி உள்ளார்.
ராகுல் காந்தியின் இலக்கு மேற்கு வங்கத்திலும், அசாம் மாநிலத்திலும் இருந்தது. தமிழ்நாட்டில் ராகுல்காந்திக்கு திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என தெரியும் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் ஓய்வில் உள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் சேகர் பாபு போன்றோர் கொடைக்கானல் சென்றுள்ளனர். அந்த வகையில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகையும் கொடைக்கானலில் ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த செல்வபெருந்தகை, செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறும்போது, தேர்தல் பரப்புரையில் ஒரே மேடையில் ராகுல் காந்தியும், முதலமைச்சர் ஸ்டாலினும் கலந்துக் கொள்ளாததில், சர்ச்சையும் கிடையாது, திட்டமிடுதலும் கிடையாது என்று கூறியவர்,
ராகுல் காந்தியுடன் நான் ஹெலிகாப்டரில் சென்றபோது பேசிக் கொண்டிருந்தோம். அப்போது, பாஜகவினர் எல்லாரையும் மிரட்டி விலைக்கு வாங்கலாம். ஆனால் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலினை விலைக்கு வாங்க முடியாது. அவர் தமிழ்நாட்டின் குரலாக தலை நிமிர்ந்து நிற்பதாக தெரிவித்தார். ராகுல்காந்திக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மீது எந்தவொரு கோபமும் இல்லை. அப்படி இருந்தால் தேர்தல் பரப்புரையில் ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராவார் என ராகுல்காந்தி எப்படி சொல்லியிருப்பார் சொல்லுங்கள்” என செல்வப்பெருந்தகை கூறினார்.
மேலும், எல்லாருக்கும் பெருவாரியான வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருப்பது போல தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இருக்கலாம். ஆனால் மக்களின் நம்பிக்கை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆட்சியமைக்கும் என்பது தான் தீர்ப்பாக மாறும். எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ் தான் அமையும். நாங்கள் 28 இடங்களில் போட்டியிட்டு அனைத்திலும் வெற்றி பெறுவோம். எடப்பாடி பழனிசாமி எங்களுக்கும் கீழ் தான் வெற்றி பெறுவார். பொறுத்திருந்து பார்ப்போம்”
இவ்வாறு கூறினார்.
[youtube-feed feed=1]