சென்னை: மாற்றுத் திறனாளிகள் ரயில்களில் உள்ள சிறப்பு பெட்டிகளில் பயணிக்க சலுகையை பயன்படுத்தலாம் என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.
ரயில்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகளில் (திவ்யங்ஜன் பெட்டிகளில்) பயணிக்க, இனி, யுடிஐடி என்னும் தேசிய தனித்துவமான அடையாள அட்டை பயன்படுத்தலாம் என, ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

இந்திய இரயில்வேயானது, எலும்பு சார்ந்த குறைபாடுகள், பார்வைக் குறைபாடு, மனவளர்ச்சி குன்றிய நிலை மற்றும் காது கேளாதோர்/பேச இயலாதோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு (PwDs) கணிசமான கட்டணச் சலுகைகளையும் (75% வரை) சிறப்புப் பெட்டிகளையும் (SLRD/LSLRD) வழங்குகிறது. இந்தப் பெட்டிகளில் இருக்கைகளை முன்பதிவு செய்யவும், சலுகைக் கட்டணங்களைப் பெறவும், செல்லுபடியாகும். இந்த சலுகை பெற ‘தனித்துவ மாற்றுத்திறனாளி அடையாள அட்டை’ (UDID) அல்லது இரயில்வேயால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அவசியம் ஆகும்.
இந்த நிலையில், ரயில்வே வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், இந்திய ரயில்வே வாரியம் சார்பில் இயக்கப்படும், ஒவ்வொரு சாதாரண மற்றும் விரைவு ரயில்களில், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் பயணிக்க, ரயில்வே வாரியம் வழங்கும் கட்டண சலுகை, பாஸ் பெற்றவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
இதர மாற்றுத் திறனாளிகள், முன்பதிவில்லாத சாதாரண பெட்டிகளில் கட்டணம் செலுத்தி பயணித்து வந்தனர். இந்நிலையில், தேசிய மாற்றுத் திறனாளி நலத்துறை வாயிலாக, யுடிஐடி என்னும் தனித்துவமான அடையாள அட்டை பெற்ற அனைவரும், இப்பெட்டிகளில் பயணிக்கலாம்.
ரயில்வே வாரியத்தின் கட்டண சலுகை பாஸ் பெற்றவர்களும் இப்பெட்டிகளில் பயணிக்கலாம். அத்தகைய பாஸ் பெறாத மாற்றுத் திறனாளிகள், கட்டண டிக்கெட் பெற்று, தங்கள் யுடிஐடி அட்டையை காட்டி, இந்த சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்.
அனுமதியின்றி இப்பெட்டியில் ((திவ்யங்ஜன் பெட்டி) பயணிக்கும் இதர பயணிகள் மீது, ரயில்வே சட்டத்தின் கீழ், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]