டெல்லி: பிரதமர் மோடியின் ‘மனதில் குரல்’ உரை மூலம் தமிழகத்தையும், தமிழக மாணவி ஒருவரையும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.

பிரதமர் மோடி, மாதந்தோறும் வானொலி மூலம் மான்கிபாத் (மனதின் குரல்) என்ற பெயரில், இந்திய நிகழ்வுகள் மற்றும் முக்கிய பிரச்சினைகள் குறித்து மக்களிடையே உரையாற்றி வருகிறார். இதற்கு பெரும் வரவேற்பு உள்ளது. இந்த நிகழ்ச்சியின்போது, பட்டி தொட்டிகளில் உள்ள சிறு விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்களையும் கண்டறிந்து, அவர்களை பாராட்டி வருகிறார்.
ஏற்கனவே தமிழ்நாட்டைச்சேர்ந்த மறைந்த விஞ்ஞானி, சர் சி.வி.ராமன் கண்டுபிடிப்பு அறிவிக்கப்பட்ட தேசிய அறிவியல் தினம் குறித்து பேசியதுடன், நமது விஞ்ஞானிகள் குறித்து இளைஞர்கள் நிறைய படிக்க வேண்டும் என்றும, அறிவியல் என்பது எல்லை இல்லாதது என்று கூறியதுடன், உலகின் மிகப் பழமையான மொழியான தமிழைக் கற்றுக்கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது. உலகம் முழுவதும் தமிழ்மொழி பிரபலமாக இருக்கிறது. உலகின் தொன்மையான மொழி அழகான மொழியான தமிழின் இலக்கியத்தரம், தமிழ் கவிதைகளின் ஆழம் பற்றியும் ஏராளமானோர் என்னிடம் புகழ்ந்து கூறியுள்ளனர். இந்தியா பல மொழிகளின் பூமி. இது நமது கலாசாரத்தையும், பெருமையையும் குறிக்கிறது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 26, 2026) காலை. தனது 133வது மான் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டையும், தமிழர்கள் குறித்தும் சிலாகித்து பேசினார்.
இதுகுறித்து தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மனதின் குரலில் தமிழகத்தைப் பெருமையுடன் குறிப்பிட்ட மாண்புமிகு பிரதமர் அவர்கள்! மாதந்தோறும் “மனதின் குரல்” என்னும் நிகழ்ச்சியின் வாயிலாக நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள், நாட்டுமக்களிடம் உரையாடி வருவது நாம் அனைவரும் அறிந்ததே!
அந்த வகையில் 133-ஆம் அத்தியாயமான இன்றைய மனதின் குரல் நிகழ்ச்சியில், தன்னிலையான அணுக்கருப்பிளவு சங்கிலி தொடர் வினையை நமது தமிழகத்தின் கல்பாக்கம் அணு மின்நிலையம் வெற்றிகரமாக எட்டிவிட்டதை மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டார்.
அதேபோல, காற்றின் வாயிலாக மின்சாரம் உற்பத்தி செய்வதில் தமிழகம் முக்கியப் பங்காற்றி வருவதையும் பெருமையுடன் குறிப்பிட்டார்.
ஃப்ரான்ஸில் நடைபெற்ற கணித ஒலிம்பியாட் தேர்வில் உலகளவில் ஆறாவது இடத்தைப் பிடித்து சாதித்த நமது பாரத தேசக் குழந்தைகளைக் குறிப்பிடும் போது, வெண்கலப் பதக்கம் வென்ற சென்னையைச் சேர்ந்த மாணவி செல்வி. ஷிவானி பரத் குமார் அவர்களைப் பாராட்டியது மகிழ்ச்சியளிக்கிறது.
மேலும், புத்த பூர்ணிமாவை முன்னிட்டு, புத்தபெருமான் போதித்த நெறிகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டுமெனவும், நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2026 மக்கள்தொகை கணக்கெடுப்பில் பாரத மக்கள் பெருவாரியாகப் பங்குபெறவும் அன்புடன் வலியுறுத்தினார்.
இவ்வாறு கூறி உள்ளார்.‘
[youtube-feed feed=1]