சென்னை: ஆம்ஆத்மியின் இளம் எம்.பி ராகவ் சதா, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உள்பட 7 முக்கிய எம்பிக்கள் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். இது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய மாநிலங்களவை உறுப்பினர்களான ராகவ் சதா, அசோக் மிட்டல் மற்றும் சந்தீப் பதக் உள்ளிட்டோர், கட்சித் தாவல் தடைச் சட்டத்திலிருந்து தப்பிக்கும் வகையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பா.ஜ.கவில் இணைந்துள்ளனர். இதனால், கட்சித்தாவல் தடை சட்டப்படி அவர்களை பதவி நீக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் மத்தியஅரசு கொண்டு வந்த பெண்கள் இடஒதுக்கீடு மற்றும் மக்களவை விரிவாக்கம் தொடர்பான மசோதாக்கள், போதிய பெரும்பான்மை இல்லாமல் திரும்பிய நிலையில், ஆத்ஆத்மி எம்.பி.க்கள் கூண்டோடு பாஜகவில் இணைந்துள்ளது அரசியல் களேபரத்தை ஏற்படுத்தி உள்ளது.
‘இதுகுதித்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் சிங், கட்சியில் இருந்து விலகிய ஏழு உறுப்பினர்களையும் கடுமையாகச் சாடினார். இது குறித்து அவர் கூறுகையில், “இந்த ஏழு பேரும் மக்களுக்கு துரோகம் செய்து விட்டனர். மக்கள் இவர்களை ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள் என்று சாடியுள்ளார்.
மேலும், பஞ்சாபில் இப்போது நல்லாட்சி நடைபெற்று வருகிறது. ஆனால், அதற்கு எதிராக ‘ஆபரேஷன் தாமரை’ என்ற பெயரில் அரசியல் நாடகம் அரங்கேற்றி வருகின்றனர். சிபிஐ, அமலாக்கத்துறை இதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை செய்தே பலரை தங்களின் சதித்திட்ட வலையில் பாஜக வளைத்துப்போட்டு வருகிறது” என குற்றஞ்சாட்டி உள்ளார். இது டெல்லி அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக, ஏப்ரல் 24ந்தேதி அன்று, ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. ராகவ் சதா, அசோக் மிட்டல் மற்றும் சந்தீப் பதக் ஆகியோருடன் பா.ஜ.கவில் இணைந்துள்ளார். இதையடுத்து, கட்சி சகாக்களான சந்தீப் பதக் மற்றும் அசோக் மிட்டல் ஆகியோருடன் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சதா, மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களாகிய நாங்கள், இந்திய அரசியலமைப்பின் விதிகளைப் பயன்படுத்தி பாஜகவுடன் இணைய முடிவு செய்துள்ளோம் என்று கூறினார்.
எங்களைத் தவிர, ஹர்பஜன் சிங், ராஜேந்தர் குப்தா, விக்ரம் சாஹ்னி மற்றும் சுவாதி மாலிவால் ஆகியோரும் உள்ளனர் என்று கூறிய சதா, ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ள பஞ்சாபில் தேர்தலுக்குத் தயாராகி வரும் வேளையில் இந்த இணைப்பு நிகழ்ந்துள்ளதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. தன்னுடன் பல தலைவர்கள் பாஜகவில் இணைவார்கள் என்ற சாத்தாவின் கூற்று உண்மையாக இருந்தால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் வரம்பிலிருந்தும் அவர்கள் தப்பிவிடுவார்கள் என்றார்.
முப்பத்தேழு வயது இளம் எம்.பியான ராகவ் சாதா, ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்டதிலிருந்தே அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இருந்து வருகிறார். டெல்லியின் மாடர்ன் பள்ளியின் முன்னாள் மாணவரான இவர், ஒரு சிஏ ஆடிட்டர்.. ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தின் இறுதிக்கட்டத்தில், கெஜ்ரிவாலும் மற்றவர்களும் ஒரு கட்சியைத் தொடங்குவதா வேண்டாமா என்று விவாதித்துக் கொண்டிருந்தபோது, சாதா அவரைச் சந்தித்தார். விரைவில், அவர் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக அறிமுகமாக ஆனார். தனது 26வது வயதில், அவர் கட்சியின் தேசிய பொருளாளராக நியமிக்கப்பட்டார்.
பின்னர், 2020 டெல்லி தேர்தலில், சாதா ராஜேந்திர நகர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, டெல்லி ஜல் வாரியத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். 2022-ல், அவர் ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராகவும், ராஜ்ய சபாவில் அக் கட்சியின் துணைத் தலைவராகவும் இருந்தவர் ராகவ் சதா.
இவரை சமீபத்தில் மாநிலங்களவை துணைத் தலைவர் பதவியில் இருந்து அக்கட்சி தலைமை நீக்கி நடவடிக்கை மேற்கொண்டது. இதனால் அதிருப்தியில் இருந்த ராகவ் சதா, தற்போது ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகியதாக அறிவித்துள்ளார். மேலும், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேருடன் பாஜகவில் இணைந்ததாக அறிவித்துள்ளார்.
பாஜகவில் இணைந்த 7 ஆம்ஆத்மி எம்.பி.க்கள் விவரம்:
- ராகவ் சத்தா: ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் தேசியப் பேச்சாளர் மற்றும் முக்கிய வியூக வகுப்பாளர்.
- அசோக் மிட்டல்: LPU-வின் நிறுவனர் மற்றும் சமீபத்தில் நியமிக்கப்பட்ட துணைத் தலைவர்.
- சந்தீப் பதக்: ஆம் ஆத்மி கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் (அமைப்பு).
- ஹர்பஜன் சிங்: புகழ்பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்.
- சுவாதி மாலிவால்: டெல்லி மகளிர் ஆணையத்தின் (DCW) முன்னாள் தலைவர்.
- விக்ரம் சாஹ்னி: முன்னணி தொழில்முனைவோர் மற்றும் வள்ளல்.
- ராஜேந்திர குப்தா: பிரபல தொழிலதிபர்.