சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைத வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதியான ‘யார் அந்த சார்’ ஞானசேகரன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மருத்துவமனையில் உள்ள திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு என்ன நேர்ந்தாலும் அதற்கு ஸ்டாலின் தான் பொறுப்பு என்று அதிமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில், திமுக உறுப்பினரான சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த பிரியாணி கடை உரிமையாளர் ஞானசேகரனை (38) கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீஸார் 2024 டிசம்பரில் கைது செய்து சிறையில் அடைத்தனர். எஇந்த வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை (30 ஆண்டு சிறை) விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2-ம் தேதி தீர்ப்பளித்தது.
இதையடுத்து அவர் புழல் சிறையில் தண்டனை கைதிகள் பிரிவில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு நேற்று அதிகாலை 1.30 மணியளவில் திடீரென உடல் நலக்குறைவு (வலிப்பு) ஏற்பட்டதை அடுத்து, சிறைக் காவலர்கள் அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தற்போது ஞானசேகரன் அவசர சிகிச்சைப் பிரிவு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஏற்கெனவே 4 முறை ஞானசேகரனுக்கு இதுபோன்று வலிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ள நிலையில், தற்போது 5-வது முறையாக வலிப்பு நோய் காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக அதிமுக தலைமை கழகம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அண்ணா பல்கலைக்கழக வழக்கில் குற்றவாளியான திமுக அனுதாபி ஞானசேகரன் ஏப்ரல் 20ந்தேதி அதிகாலை சிறையில் இருந்து அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு உள் நோயாளியாக அழைத்து செல்லப்பட்டு அனுமதிக்கபட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
ஏற்கனவே யார் அந்த SIR என்ற உண்மை தெரியவிடாமல் அவசர கதியில் முடிக்கப்பட்ட இந்த வழக்கை அதிமுக ஆட்சி அமைந்ததும் மீண்டும் விசாரித்து யார் அந்த சார் என்பது கண்டறியப்படும் என புரட்சித் தமிழர் எடப்பாடியார் அறிவித்திருந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்படப் போவதை உணர்ந்துவிட்ட திமுக அரசு, பயத்தில், பதற்றத்தில், காபந்து அரசாக இருக்கும் போதே இந்த வழக்கின் போக்கை ஒட்டுமொத்தமாக ஆதாரமின்றி முடிந்துவிட வேண்டும் என நினைக்கிறதா? என்ற சந்தேகம் தமிழக மக்களிடையே நிலவியுள்ளது.
மருத்துவமனையில் உள்ள திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு என்ன நேர்ந்தாலும் அதற்கு ஸ்டாலினும், ஞானசேகரன் வீட்டில் பிரியாணி சாப்பிட்ட திமுக அமைச்சரும் தான் பொறுப்பு!
ஏதாவது சித்துவேலை செய்யலாம் என்று திமுக நினைத்தால், அதற்கான பின்விளைவுகள் மே-4 ஆம் தேதிக்கு பிறகு கடுமையாக இருக்கும் என்பதை எச்சரிக்கிறோம்”.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]