விருதுநகர்: விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் 25 பேர் பலியான நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் இயங்கி வந்த ‘வனஜா’ பட்டாசு ஆலையில் நேற்று (ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை)பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. விதிமுறைகளை மீறி ஞாயிற்றுக்கிழமை அன்று ஆலை செயல்பட்டதே இந்த உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இந்தர பட்டாசு ஆலை விபத்தில் 25 பேர் உயிரிழந்த நிலையில், இதுகுறித்து தானாகவே வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் முறையிட்டப்பட்டுள்ளது. அப்போது, நீதிபதிகள், இதற்கு நிவாரணம் அறிவிக்கவில்லையே ஏன் தமிழ்நாடு அரசை கேட்டுக்கொண்டது.
இந்த நிலையில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ. 5.50 லட்சம் நிவாரணம் வழங்க பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் முன்வந்துள்ளது.
விருதுநகர் தாலுகா, சங்கரலிங்காபுரம் அருகிலுள்ள கோவிந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துமாணிக்கம் என்பவரின் மனைவி ஈஸ்வரிக்குச் சொந்தமான இந்த ஆலையில், நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கி இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சோகமான விஷயம் என்னவென்றால், பலியானவர்களில் 18 பெண்கள் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும், மருதன் – நாகம்மாள் தம்பதியினர் இந்த விபத்தில் உயிரிழந்ததால், அவர்களின் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகன் அனாதையாக நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 16 பேர் தற்போது விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள உரிமையாளரைத் தேட நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதற்கட்ட விசாரணையில், மருந்து கலக்கும் அறையில் அதிகப்படியான வெடிபொருட்களைக் கவனக்குறைவாகக் கையாண்டதே விபத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரத்தை மதுரை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதில் ஏன் தாமதம் ஏற்படுகிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதுடன், இது குறித்து அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
இதற்கிடையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் நிவாரண நிதி அறிவிப்பதில் சிக்கல் நீடிப்பதாகத் தெரிகிறது. இதனால், உரிய நிவாரணம் கிடைக்கும் வரை உடல்களைப் பெற்றுக்கொள்ளப் போவதில்லை எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலையை உணர்ந்து, பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, உயிரிழந்த 25 நபர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 5.50 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தத் துயரச் சம்பவம் பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிமுறைகளை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது.
[youtube-feed feed=1]