சென்னை: மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியை சந்தித்த நிலையில், டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

மத்திய பாஜக அரசு தொகுதி மறுவரையறையை முன்னெடுக்கும் நோக்கில் கொண்டு வந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் தோல்வியடைந்தது. இந்த மசோதாவிற்கு ஆதரவாக மொத்தம் 298 வாக்குகள் பதிவாகின. மசோதாவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் தரப்பில் 230 வாக்குகள் விழுந்தன.
சாதாரண சட்டங்களுக்கு வெறும் பெரும்பான்மை போதுமானது என்றாலும், அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தைப் பொறுத்தவரை அவைக்கு வருகை தந்து வாக்களிக்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) ஆதரவு கட்டாயம். அந்த கணக்குப்படி பார்த்தால் வாக்கெடுப்பில் பங்கேற்ற 528 உறுப்பினர்களில், மசோதா வெற்றி பெற குறைந்தபட்சம் 352 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்டது. ஆனால், அரசுக்கு 298 வாக்குகள் மட்டுமே கிடைத்ததால் மசோதா தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில், மசோதா தோல்வி குறித்து தனது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் “டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு! என பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு! டெல்லியின் ஆணவத்தையும் – ஆணவத்துக்குத் துணை போகும் அடிமைகளையும் ஏப்ரல் 23 அன்று ஒருசேர வீழ்த்துவோம்!
தமிழ்நாட்டின் ஜனநாயகக் குரலை முடக்க முயற்சிக்கும் தொகுதி மறுவரையறை எனும் பேராபத்தை எதிர்த்து ஓராண்டுக்கு முன்பே மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் போராட ஆரம்பித்துவிட்டார். தமிழ்நாட்டின் மண் – மொழி – மானம் காக்க எந்த எல்லைக்கும் செல்ல தி.மு.கழகம் தயாராக இருந்தது.
இன்று ஒன்றிய மைனாரிட்டி பாஜக அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடையச் செய்திருக்கிறோம். தமிழ்நாடு Vs டெல்லி அணி ஜனநாயகப் போரில் மே.04 அன்று நாம் பெறப்போகும் மாபெரும் வெற்றிக்கு ஓர் முன்னோட்டமே இந்த வெற்றிச் செய்தி!
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]