சென்னை: தவெக தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் தெரிவித்துள்ள சொத்து விவரங்கள் குறித்து விசாரிக்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தவெக தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், தனது வேட்புமனுவில் சொத்து கணக்குகள் மறைக்கப்பட்டு உள்ளதாகவும், அதுகுறித்து வருமான வரித்துறை விசாரிக்க கோரி வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வியாசர்பாடியைச் சேர்ந்த பெரம்பூர் வாக்காளரான விக்னேஷ் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார், மனுவில், தமிழக சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இரு தொகுதிகளிலும் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாகவும், பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்துக் கணக்கை மறைத்துள்ளதாகவும் கூறி உள்ளார்.
மேலும், விஜய் பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில் தனது சொத்து மதிப்பு 115 கோடியே 13 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் எனக் குறிப்பிட்டிருந்த விஜய், திருச்சி கிழக்கு தொகுதிக்கான வேட்புமனுவில் 220 கோடியே 15 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் எனக் குறிப்பிட்டுள்ளார்.
திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிட்ட சொத்து மதிப்பை விட பெரம்பூரில் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறைவாக காட்டியது குறித்து எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. இது உண்மை தகவலை மறைத்ததற்கு சமம் என்பதால் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் தெரிவித்துள்ள சொத்து விவரங்கள் முழுமையானவையா, உண்மையானவையா என்று விசாரிக்குமாறு வருமான வரித்துறைக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும். இந்த விசாரணை அறிக்கையை தேர்தலுக்கு முன்பு பொதுமக்களுக்கு வெளியிடுமாறு சென்னை மற்றும் திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
[youtube-feed feed=1]