மீஞ்சூர்: மீஞ்சூரில் 21 வயது பெண்ணை ஒரு கும்பல் அரிவாளால் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் இதுவரை பிரசாரம் செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளதைப் பற்றி ஒரு வார்த்தையாவது பேசினாரா? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

விசாரணையில், கஞ்சா போதையில், அந்த இளம்பெண்ணின் வீட்டுக்குள் புகுந்த இளைஞர்கள் அவரை பாலியல் வன்கொடுமை செய்ய அரிவாளால் வெட்டி பயமுறுத்தி உள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அந்த இளம்பெண் அவர்களிடம் இருந்து தப்பி வெளியேறி உள்ளார். இதனால், போதை ஆசாமிகள் மூன்று பேரும் அங்கிருந்து தப்பித்துள்ளனர். காயமடைந்த இளம்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மீஞ்சூர் மாணவியை இளைஞர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,, பாஜக மாநில முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாட்டில் இதுவரை தேர்தல் பிரசாரம் செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளதைப் பற்றி ஒரு வார்த்தையாவது பேசினாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை மீஞ்சூரில் மசூதி தெருவில் செமஸ்டர் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த மாணவியை நேற்று இரவு மர்ம நபர்கள் 3 பேர் வீடு புகுந்து அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த மாணவி பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கஞ்சா போதையில் வந்த கும்பல், மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் பற்றி இபிஎஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியைக் குறிவைத்து கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, பாதிக்கப்பட்ட மாணவி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் மாணவி உயிருக்கு போராடி வருவதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
இந்த கொடூரக் குற்றத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
கஞ்சா போதை, பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி, இதுதான் திமுக ஆட்சிக்காலம்! படிக்கும் கனவுகளோடு இருந்த மாணவியை, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராட வைத்திருப்பதுதான் ஸ்டாலின் மாடல். இந்த மாடல் தான் மீண்டும் வர வேண்டும் என்று ஸ்டாலின் துடித்துக்கொண்டு இருக்கிறார்.
நான் ஒன்றே ஒன்று கேட்கிறேன்- இத்தனை நாள்கள் தேர்தல் பிரசாரம் செய்த ஸ்டாலின், தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளதைப் பற்றி ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை பேசினாரா? தன் ஆட்சிக்கான பொறுப்பு இல்லாத, என்ன நடக்கிறது என்று ஐடியா-வே இல்லாத ஒரு முதல்வர் தமிழ்நாட்டை ஆண்டது போதும். ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான கேள்வி ஒன்றே ஒன்று தான்- தமிழகம் வாழ வேண்டுமா? ஆம் என்றால், திமுக வீழ்ந்தே ஆக வேண்டும்!” என்று பதிவிட்டுள்ளார்..
அண்ணாமலை வெளியிட்டுள்ள கண்டனம் பதிவில், சென்னை மீஞ்சூரில் மசூதி தெருவில் செமஸ்டர் தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்த மாணவியிடம் நேற்று இரவு 3 இளைஞர்கள் கஞ்சா போதையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.அவர்களிடம் இருந்து தப்ப முயன்ற மாணவியை பட்டாக்கத்தியால் வெட்டிவிட்டு மூன்று இளைஞர்களும் தப்பியோடிய நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அண்ணாமலை வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:”மீஞ்சூர் அருகே உள்ள வல்லூர் வாலாஜா நகரில், வீட்டில் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்த மாணவியை, கஞ்சா போதையில் வீட்டினுள் புகுந்த கும்பல், பட்டாக்கத்தியால் வெட்டி, மாணவி தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியின் அவலம், இன்று கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு, போதைப் பொருள் புழக்கம் பெருகி, வீட்டிற்குள் இருக்கும் நமது குழந்தைகளுக்கே பாதுகாப்பில்லாத நிலை இன்று உருவாகியிருக்கிறது. மாணவியைத் தாக்கிய மூன்று பேர் கொண்ட போதைக் கும்பலில், காவல்துறையினர் இதுவரை, ஒருவனை மட்டுமே கைது செய்திருப்பதாகத் தெரிகிறது.
போதைப் பொருள் கடத்துபவனும், விற்பவனும், பயன்படுத்துபவனும் எங்கு இருக்கிறான் என்பது தமிழக காவல்துறைக்குத் தெரியாதா? திமுக அதிகாரமட்டம், காவல்துறையின் கைகளைக் கட்டிப் போட்டிருப்பதன் விளைவு, இன்று ஒவ்வொரு நாளும், தமிழக மக்கள் ஒவ்வொருவரின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியிருக்கிறது. திமுகவினர் பணம் சம்பாதிக்க, போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தாமல் இருக்கும் திமுக ஆட்சி அகற்றப்படவில்லை என்றால், அடுத்த ஐந்து ஆண்டுகளில், நமது குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆகும் என்ற அச்சம் ஏற்படுகிறது.
தமிழகம் முழுவதும் போதைப்பொருள்களை புழக்கத்தில் விடுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க, தமிழக காவல்துறையை வலியுறுத்துகிறேன். பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. தங்கள் குழந்தைகளைக் காப்பாற்ற, தாங்களே நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு, பொதுமக்களைத் தள்ள வேண்டாம்.
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]