சென்னை: தமிழ்நாட்டில் 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் இன்று முதல் அமலுக்கு வந்ததுள்ளத. இதன் காரணமாக சென்னை   காசிமேடு, பட்டினம்பாக்கம்,  கடலூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில்  விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையிவ்ல நிறுத்தப்பட்டுள்ளன.

‘தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் 1983’-இன் கீழ், மீன்களின் இனப்பெருக்கக் காலத்தைக் கருத்தில் கொண்டும், மீன்வள ஆதாரங்களைப் பாதுகாக்கும் நோக்கிலும், தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை, 61 நாட்களுக்கு ஆண்டுதோறும் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் (ஏப். 15) மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளது. இதனால் 61 நாட்களுக்கு மீனவர்களால் கடலுக்கு சென்று மீன்பிடிக்க முடியாது. நாடு முழுவதுதும் தொடர்ந்து மீன்பிடித் தொழில் நடைபெற்று வந்தால், மீன் வளமும், கடல் வளமும் பெரிதும் பாதிக்கப்படும் என்பதால், மீன்பிடி தடை காலம் அறிவிக்கப்பட்டு, அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, , தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட கிழக்கு கடலோரப் பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில், இன்று அதிகாலை முதல் தமிழ்நாடு, புதுச்சேரியில் மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்தது. அதன்படி, 61 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க முடியாது. இதன்காரணமாக  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள கடலோரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்ட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தருவைக்குளம், தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகம், வேம்பார் மீன்பிடித் துறைமுகம் ஆகிய வற்றிலும் விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த மீன்பிடிக் காலக்கட்டத்தில் மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளை பழுதுபார்ப்பது, வலைகளை புதுப்பிப்பது, மீன்பிடி உபகரணங்களை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவர்

இந்த தடை என்பது நடுக்கடலில் சென்று ஆழமான பகுதிகளில் மீன்பிடிக்கும் விசைப்படகுகளுக்கு மட்டுமே பொருந்தும். சிறிய ரக ஃபைபர் படகுகள், கட்டுமரம் மூலமாக கடலோரங்களில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொள்ளலாம்.

இந்த நிலையில்,  தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலாகியுள்ள நிலையில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தூத்துக்குடி உள்ளிட்ட தமிழக கடல் பகுதிகளுக்குள் நுழைந்து மீன்பிடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]