சென்னை: தமிழகத்தில் உள்ள 60 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 முதல் கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 1, 2026 முதல் சுமார் 60-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் 3% முதல் 5% வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு கார், லோடு வாகனங்கள், கனரக வாகனங்களுக்குப் பொருந்தும்.
இந்த மாற்றத்தால் ரூ.5 முதல் ரூ.40 வரை கட்டணம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளது.
மேலும், சென்னை – கன்னியாகுமரி, திருச்சி – சேலம் மற்றும் சேலம் – கோயம்புத்தூர் போன்ற முக்கிய சாலைகளில் பயணம் செய்வோருக்கு கட்டணச் சுமை கூடும். சரக்கு போக்குவரத்து உயர்வு: கனரக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.40 வரை உயருவதால், காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது. சுங்க கட்டண உயர்வால் ஆம்னி பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கக்கூடும்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) வருடாந்திர விதிமுறைகளின்படி இந்த சுங்கக் கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
[youtube-feed feed=1]