சென்னை:  தமிழ்நாடு சட்மன்ற தேர்தலில் போட்டியிடும், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்வ தற்காக, தனது முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்க  இன்று காலை தனி விமானம் மூலம் திருவாரூர்புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.

முன்னதாக, கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் இன்று காலை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் திருவாரூரில் இன்று மாலை தனது முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் ஸ்டாலின் ம மார்ச் 30ந்தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்த பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு,   மக்களிடம் வாக்கு சேகரித்தார்

.இந்த நிலையில், திருவாரூரில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து இன்று மாலை 5 மணியளவில் தெற்குவீதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளா்களுக்காக வாக்கு சேகரிக்கவுள்ளார்.சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் தஞ்சாவூர் செல்லும் முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்து சாலை வழியாக திருவாரூக்குச் செல்லவுள்ளார்.

திருவாரூரில் திமுக சாா்பில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணன், மன்னாா்குடியில் திமுக சாா்பில் சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத்துறை அமைச்சருமான டி.ஆா்.பி. ராஜா, திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அக்கட்சியின் மாநில நிா்வாகக்குழு உறுப்பினரும், சட்டப்பேரவை உறுப்பினருமான க. மாரிமுத்து, நன்னிலத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் வி.எம்.எஸ். முகமது முபாரக் ஆகியோா் போட்டியிடுகின்றனா்..

[youtube-feed feed=1]