சென்னை: தனது உயிருள்ளவரை உஷா திரைப்படத்தின் பாடல்களை, பதிப்புரிமையை மீறி வா்த்தக ரீதியாக பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி இயக்குநா் டி.ராஜேந்தா் மற்றும் அவரது மனைவி தாக்கல் செய்த மனுவுக்கு ஏவிஎம் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அஸ்டவதானி என அழைக்கப்படும் இயக்குனர் டி.ராஜேந்தரின், வெற்றிப்படமான ‘உயிருள்ளவரை உஷா’ படப் பாடல்களால் 43 ஆண்டுக ளுக்கு சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஏவி.எம் நிறுவனத்திற்கு எதிராக டி.ராஜேந்தர் வழக்கு போட்டுள்ளார்.
இந்த திரைப்படம் வெளியான 43 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்பட்டது. இந்த படத்தின் பாடல்களின் பதிப்புரிமை, ஆரம்பத்தில் ஏவி.எம். நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், பிறகு அது பல நிறுவனங்களுக்கு அது கைமாறியது தெரியவந்தது.
தற்போது, ‘உயிருள்ளவரை உஷா’ படத்தின் பாடல்களை பதிப்புரிமையை மீறி, வர்த்தக ரீதியாக பயன்படுத்த ஏவி.எம். மற்றும் டபிள்யூ.எல். எபிக் மீடியா ஆகிய நிறுவனங்களுக்கு தடை விதிக்கக் கோரி, படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் டி.ராஜேந்தர், அவரது மனைவி உஷா ராஜேந்தர் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, ஏப்ரல் 20-ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி ஏவி.எம். மற்றும் டபிள்யூ.எல். எபிக் மீடியா ஆகிய நிறுவனங்களுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.
[youtube-feed feed=1]