சென்னை: கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த 5ஆண்டு கால திமுக ஆட்சியில் கொளத்தூர் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட சாதனைகள் குறித்த புத்தகத்தை வெளியிட்டார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி உள்ளது.  முதல்நாளான இன்று திமுக தலைவர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் உள்பட ஏராளமான அரசியல் கட்சியினர் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இதனால் அரசியல் களம் தகிக்கத் தொடங்கி உள்ளது.

இந்த நிலையில், சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் மு.க.ஸ்டாலின் தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இதை செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,” திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக நிற்கப்பட்டிருக்கக்கூடிய என்னை அமோகமான வாக்கு வித்தியாசத்தில் கொளத்தூர் மக்கள் வெற்றி பெற வைப்பார்கள்”என்று முழு நம்பிக்கையுடன் கூறினார். “தமிழ்நாட்டின் உரிமைகளை காக்க டெல்லியுடன் போராடும் தேர்தல் இது” என்றும் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து,  திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரத்தை தொடங்கினார். பின்னர், கொளத்தூர் தொகுதியில்  நடைபெற்ற நிகழ்ச்சியின், நம்ம கொளத்தூர், நம்ம முதல்வர் என தலைப்பிடப்பட்டுள்ள  தனது 5 ஆண்டுகால சாதனைகளை விளக்கும் புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த புத்தகம்  186 பக்கங்களை கொண்டுள்ளது.

[youtube-feed feed=1]