
மார்ச் 31ந்தேதி மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் , மார்ச் 31-ம் தேதி மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை மற்றும் தமிழ்நாடு மதுபான உரிமம் மற்றும் அனுமதி விதிகளின்கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், அதைச் சார்ந்த பார்கள், கிளப்புகளை சார்ந்தபார்கள், ஹோட்டல்களை சார்ந்த பார்கள் மற்றும் உரிமம்கொண்ட மதுபான விற்பனையகங்கள், மதுபான கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும்.
மார்ச் 31ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மகாவீர் ஜெயந்தி தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. மீறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.