சென்னை:  பிரபல இயக்குனரும், நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்வின் கணவருமான சுந்தர் சி,  மதுரை மத்திய தொகுதியில் களமிறங்குகிறார். இவர் புதிய நீதிக்கட்சி சார்பில் களமிறங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திமுகவும், ஆட்சியை கைப்பற்ற அதிமுகவும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. இந்த தேர்தலில் 5 முனை போட்டி நிலவி வருகிறது.

அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக,  தமாகா, புதிய நீதிக்கட்சி என பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கட்சிகளில் சில பாஜகவின் தாமரை சின்னத்திலும், சில அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 தொகுதிகளிலும் தாமரை சின்னத்திலேயே போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இந்த சட்டமன்றத் தேர்தலில் எங்களுக்கு சைக்கிள் சின்னம் கிடைக்காத நிலையில், நாங்கள் நேரடியாகக் கூட்டணியில் இருக்கின்ற பாரதிய ஜனதா கட்சியின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறோம்,” என்றார் அவர்.

அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில் அதிமுக வழங்கிய ஒரு தொகுதியில் இரட்டை இலை சின்னத்திலும், பாஜகவுக்கு வழங்கப்பட்ட 27இல் ஒரு தொகுதியைத் தங்களுக்கு வழங்கியிருப்பதால் அதில் தாமரை சின்னத்திலும் போட்டியிடவுள்ளதாக அக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் மார்ச் 27ஆம் தேதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதன்படி,  தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி சார்பில் நடிகர் இயக்குநருமான சுந்தர்.சி போட்டியிடுவதாக அறிவிக்கப்ட்டுள்ளது.    இவர் அதிமுக சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். வேறொரு தொகுதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி இது என்பது குறிப்பிடத்தக்கது.

 குஷ்புவைத் தொடர்ந்து சுந்தர்.சி -யும் அரசியலில் களமிறங்குகிறார். முதல்முறையாக அவர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

[youtube-feed feed=1]