காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட தமாகா தலைவர் மலையூர் வி.புருஷோத்தமன், கட்சிப் பதவியை ராஜினாமா செய் துள்ளார். இது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜிகே வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சில தொண்டர்களைக்கொண்டு செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும், அதிமுக, பாஜக ஆதரவுடன் ஜிகே வாசன் எம்.பி.யாகி வருகிறார். ஆனால், அவரது கட்சியினர் எந்தவொரு பதவிகளையும் பெற முடியாத நிலையே தொடர்கிறது.
இந்த நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது. இதையடுத்து, 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் தமாக வேட்பாளர்கள் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.
இந்த நிலையில்,. தமாகாவில் இருந்து விலகுவதாக காஞ்சிபுரம் மாவட்ட தமாகா தலைவர் அறிவித்து தனது பதவியை விட்ட விலகி உள்ளார். வெற்றிபெற வாய்ப்பில்லாத தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக புருஷோத்தமன் கூறி உள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘‘கட்சித்தலைமை, தமாகா கட்சியின் வளர்ச்சிக்கான எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியவர், நடைபெறவுள்ள தேர்தலில் கட்சியின் தனித்துவத்தைப் பேணாமல், பாஜகவின் ‘தாமரை’ சின்னத்தில் போட்டியிட ஜி.கே.வாசன் எடுத்துள்ள முடிவு தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்’’ என்றார்.
[youtube-feed feed=1]