சென்னை:  தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் நடவடிக்கை முடிந்து, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பின் 6.48 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி  அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். சென்னையில் மட்டும் 40 ஆயிரம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையில்,  தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல் பட்டியல் தீவிர சிருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து,   இறுதி வாக்காளர் பட்டியல், 23.2.2026 அன்று வெளியிடப்பட்டது.

இதுதொடர்பாக  செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா,  இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 26.3.2026 வரை, ‘படிவம் 6’ல் 6,48,285 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சட்டமன்றத் தொகுதி வாரியான விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

26.3.2026 வரை பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான 6.4.2026 அன்றுள்ளவாறு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும். இந்த பட்டியலில் தகுதிவாய்ந்த அனைத்து வாக்காளர்களும் சேர்க்கப்படுவர்.

2026ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்குப் பயன்படுத்தப்படவுள்ள வாக்காளர் பட்டியலானது, ஒரு ‘ஒருங்கிணைந்த பட்டியலாக’ இருக்கும். இப்பட்டியலானது, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நாளிலிருந்து (23.2.2026) வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதித் தேதி வரையிலான காலத்தில் (26.3.2026 வரை பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் 6.4.2026 அன்று தயாரிக்கப்பட்டது) தொடர் திருத்தக் காலத்தின் போது மேற்கொள்ளப்பட்ட அனைத்துச் சேர்க்கைகளையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

வாக்காளர் பட்டியலில் செய்யப்பட்ட சேர்க்கைகள், நீக்கங்கள் மற்றும் திருத்தங்கள் குறித்து தனித்தனியாக பட்டியல்கள் வெளியிடப்படுவதில்லை. மாறாக, அனைத்து வாக்காளர்களும் ஒரே வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவர், மேலும் அப்பட்டியலே அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்படும் என தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (SIR) பிறகு வெளியாகியுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் 40 ஆயிரம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சென்னையிலுள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் வருகின்ற 30-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ளதையொட்டி, தேர்தல் பணியாளர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. வேட்புமனு தாக்கல் ஆன்லைன் மூலமாக செய்ய முடியாது. வேட்புமனுவை ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்து, அதனை நேரில் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்” என  சென்னை மாநகர தேர்தல் அதிகாரி குமரகுருபரன் தெரிவித்தார்.

[youtube-feed feed=1]