சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் உள்ள பாமகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார்.

பாமகவை அன்புமணி ராமதாஸ் முழுமையாக தன்வசப்படுத்தி உள்ள நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். இவர் சட்டமன்ற தேர்தலில், சசிகலா தலைமையிலான அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அறிவித்து தேர்தலை சந்திக்கிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026க்கான தேர்தல் அறிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார். சுமார் 101 பங்கள் கொண்ட இந்த தேர்தல் அறிக்கையில், மருத்துவம், வேளாண்மை, நீதித்துறை, காவல்துறை, நீர்வளம், உள்ளிட்ட பல்வேறு துறைகளின் 75 தலைப்புகளின் கீழ் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கை வெளியிட்டு நிகழ்வில் , பாமக செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, கெளரவ தலைவர் ஜி.கே.மணி, பொதுச் செயலாளர் முரளி சங்கர், அரசியல் பிரிவு தலைவர் பேராசிரியர் தீரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் ”ஒவ்வொரு தனி மனித வளர்ச்சியும், ஒவ்வொரு குடும்பத்தின் உயர்வும் நாட்டின் மேம்பாட்டு வளர்ச்சிக்கு உதவும் என்ற அடிப்படையில் தமிழகத்தின் வளர்ச்சிக்காக இந்த தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறேன். தமிழக மக்களுக்காக நான் பாடுபடுகிறேன். என் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இதேப்போல் எங்களுடன் கூட்டணியில் இணைந்து போட்டியிடும் தோழமைக் கட்சிகளுக்கும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இந்த தேர்தல் அறிக்கை ஒட்டுமொத்த தமிழக மக்களின் வளர்ச்சிக்கானதாக அமையும்” என்றார்.
[youtube-feed feed=1]