சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின்  ஏப்ரல் 2-ம் தேதி திருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். ஏப்ரல் 6 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார்,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்  ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  தொடர்ந்து மே 4ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் இந்த முறை 5 முனை போட்டி நிலவுகிறது.  இந்த நிலையில்,  அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை களமிறக்க அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.  கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் பிரிக்கப்பட்டு வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றன.  இதன் காரணமாக தமிழ்நாடு அரசியல் களம் தகிக்கத் தொடங்கி உள்ளது.

இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் முழுவதும்  தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். அதன்படி, முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை, தனது சொந்த ஊரான திருவாரூரில்,  ஏப்ரல் 2-ம் தேதி தொடங்குகிறார். இந்த பிரசார பயணம், ஏப்ரல் 21ந்தேதி அன்று அவரது சொந்த தொகுதியான சென்னை கொளத்தூரில் நிறைவு பெறுகிறது.

இதற்கிடையில், கொளத்தூர் தொகுதியில் போட்டி முதல்வர் ஸ்டாலின் ஏப்ரல் 6 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார்

[youtube-feed feed=1]