சென்னை: வங்கக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 7 பேரை[யும், அவர்களின் இரு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துவருவது வாடிக்கையாகி வருகிறது. இதனால், தமிழக மீனவர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எப்போதும்போல மத்தியஅரசுக்கு கடிதம் எழுதி வருகிறார். ஆனால், இந்த விவகாரத்தில் இறுதியான மற்றும் உறுதியான முடிவு எடுக்கப்படாமல் உள்ளது.
இந்த நிலையில், நேற்று இரவு (புதன்கிழமை ) நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 7 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். மேலும் அவர்கள் வைத்திருந்தது இரண்டு விசைப் படகு பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஏழு பேரையும் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட‘ ஏழு மீனவா்களையும் அவர்களின் இரண்டு , விசைப் படகுகளையும், காங்கேசன் கடற்படை முகாமுக்கு இலங்கைக் கடற்படையினா் கொண்டு சென்று, அந்த நாட்டு மீன்வளத் துறை அதிகாரிகளிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகவும், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தியதாகவும் 2 மீனவா்கள் மீது வழக்குப் பதிந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
இலங்கை கடற்படையினர் கைது நடவடிக்கையால் மீனவர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். கைது செய்யப்பட்ட 7 மீனவா்களையும், பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகையும் உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
[youtube-feed feed=1]