தஞ்சாவூர்: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக கூட்ட​ணிக்கு ஆதரவு அளிப்​ப​தாக தமிழர் தேசிய முன்​னணி நிறு​வனத் தலை​வர் பழ.நெடு​மாறன் தெரி​வித்​தார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15ந்தேதி அன்று மாலை அறிவித்துள்ளது.  அதன்படி, வேட்புமனு தாக்கல் மார்ச் 30ம் தேதி  தொடங்குகிறது. இதையடுத்து ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 4ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் இந்த முறை 5 முனை போட்டி நிலவுகிறது.  இந்த நிலையில்,  அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை களமிறக்க அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. இதன் காரணமாக தமிழ்நாடு அரசியல் களம் தகிக்கத் தொடங்கி உள்ளது.

இந்த நிலையில், தஞ்​சாவூரில் தமிழர் தேசிய முன்​னணி​யின் மாநில செயற்​குழு கூட்​டம் நிறு​வனத் தலை​வர் பழ.நெடு​மாறன் முன்​னிலையில் நடை​பெற்​றது.   இந்த கூட்​டத்​தில் எடுக்​கப்​பட்ட முடிவு​கள் குறித்து பழ.நெடு​மாறன் பின்​னர் செய்​தி​யாளர்​களை சந்தித்து கூறினார்.

அப்போது,  தேசிய முன்​னணி​யின் மாநில செயற்​குழு கூட்​​டத்​தில் தமிழகத்​தில் நடை​பெறவுள்ள சட்​டப்​பேர​வைத் தேர்​தல் குறித்து விவா​திக்​கப்​பட்​டது. இதில் தமிழ் மற்​றும் தமிழ்​நாட்​டின் நலனுக்கு எதி​ராக செயல்​படு​வது, இந்தி மற்​றும் சமஸ்​கிருத மொழியை தமிழகத்​தில் திணிப்​பது, இந்து மதவாதத்தை தூக்கி பிடிப்​பது போன்ற நடவடிக்​கை​களில் ஈடு​படும் பாஜக, தமிழகத்​தில் பல கட்​சிகளு​டன் கூட்​டணி அமைத்​துள்​ளது.

இந்த பேர​பா​யத்தை முறியடிக்க வேண்​டியது தமிழர்​களின் முதன்​மை​யான கடமை​யாகும். எனவே, பாஜக கூட்​ட​ணியை முறியடிக்​கும் வகை​யில், வரும் தேர்​தலில் திமுக கூட்​ட​ணிக்கு ஆதரவு அளிப்​பது என முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

இவ்​வாறு பழ.நெடு​மாறன் தெரி​வித்​தார்​.

[youtube-feed feed=1]