சென்னை: பெரும் பரபரப்பை ஏற்படுததிய  அண்​ணாநகர் சிறுமி பாலியல் வன்​கொடுமை வழக்கை தினந்​தோறும் விசா​ரித்து விரை​வாக முடிக்க வேண்​டுமென போக்சோ சிறப்பு நீதி​மன்​றத்துக்கு  சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

சென்னை அண்​ணாநகரில் 10 வயது சிறுமி பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்​டார். இதுதொடர்​பாக புகார் அளிக்​கச் சென்ற பெற்​றோரை அண்​ணா நகர் அனைத்து மகளிர் போலீ​ஸார் தாக்​கிய சம்​பவம் தொடர்​பாக சென்னை உயர் நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து வழக்​காக விசா​ரித்​தது. இதே​போல பாதிக்​கப்​பட்ட தங்​களுக்கு உரிய இழப்​பீடு வழங்​கக்​கோரி​யும், தவறு செய்த போலீ​ஸார் மீது நடவடிக்கை எடுக்​கக்​கோரி​யும் சிறுமி​யின் தாயாரும் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

 “அண்​ணாநகர் சிறுமி பாலியல் வன்​கொடுமை வழக்கை போக்சோ சிறப்பு நீதி​மன்​றம்  விரை​வாக முடிக்க வேண்​டும் என்று கோரியிருந்தார். மேலும்,  பாதிக்​கப்​பட்ட தங்​களுக்கு உரிய இழப்​பீடு வழங்​கக்​கோரி​யும், தவறு செய்த போலீ​ஸார் மீது நடவடிக்கை எடுக்​கக்​கோரி​யும் சிறுமி​யின் தாயார் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

இந்த வழக்​கு​களை விசா​ரித்த நீதிப​தி​கள் பி.வேல்​முரு​கன், எம்​.ஜோ​தி​ராமன் ஆகியோர் அடங்​கிய அமர்​வு, “அண்​ணாநகர் சிறுமி பாலியல் வன்​கொடுமை வழக்கை போக்சோ சிறப்பு நீதி​மன்​றம் தினந்​தோறும் விசா​ரித்து விரை​வாக முடிக்க வேண்​டும்.வழக்​கின் புலன் விசா​ரணை மற்​றும் நீதி​மன்ற விசா​ரணை போக்சோ விதி​களுக்கு உட்​பட்டு நடப்​பதை நீதி​மன்​றம் உறுதி செய்ய வேண்​டும்.

வன்​கொடுமைக்கு உள்​ளான சிறுமி​யின் அடை​யாளத்தை பொது​வெளி​யில் அம்​பலப்​படுத்​திய போலீஸ் அதி​காரி​களுக்கு எதி​ராகப் பதி​யப்​பட்ட வழக்கை உயர் நீதி​மன்​றத்​தால் நியமிக்​கப்​பட்ட சிறப்பு புல​னாய்​வுக் குழு நியாய​மான முறை​யில் பாரபட்​சமற்ற முறை​யில் விசா​ரிக்க வேண்​டும்.

பாதிக்​கப்​பட்ட சிறுமிக்கு ஏற்​கெனவே ரூ.4 லட்​சம் இடைக்​கால இழப்​பீ​டாக வழங்க உத்​தர​விடப்​பட்​டுள்ள நிலை​யில், இறுதி இழப்​பீட்​டுத் தொகையை போக்சோ சிறப்பு நீதி​மன்​றம் பரிசீலித்து உத்​தரவு பிறப்​பிக்க வேண்​டும்.

அதே​போல காவல் துறை அதி​காரி​களுக்கு எதி​ரான துறை ரீதியி​லான விசா​ரணையை தமிழக அரசு சுதந்​திர​மாக மேற்​கொண்டு விரைந்து முடிக்க வேண்​டும். பாதிக்​கப்​பட்ட சிறுமி, அவரது குடும்​பத்​துக்கு உரிய பாது​காப்​பு வழங்​க வேண்​டும்​” என உத்தரவிட்டுள்ளனர்.

[youtube-feed feed=1]