சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரத்திற்கான நட்சத்திர பேச்சாளர்கள் 222 பேருக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15ந்தேதி அன்று மாலை அறிவித்துள்ளது. மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 4ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் இந்த முறை 5 முனை போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், வேட்பு மனுத் தாக்கல் மார்ச் 30ந்தேதி தொடங்குகிறது. இதையடுத்து வேட்பாளர்கள் பட்டியலை அரசியல் கட்சிகள் வெளியிட்டு வருகின்றன.
இதற்கிடையில், தேர்தல் பிரசாரத்திற்காக களமிறங்கும் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் கோரியிருந்தது. சட்டசபை தேர்தலின் போது ஒவ்வொரு கட்சியும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளது. அந்தந்த கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் யார் யார்? என்பதை ஒவ்வொரு கட்சியும் அறிவிக்கும்படி தேர்தல் கமிஷன் கேட்டுக்கொண்டுள்ளது. ஏனென்றால், அறிவிக்கப்பட்ட நட்சத்திர பேச்சாளருக்கான போக்குவரத்து உள்ளிட்ட தேர்தல் பிரசார செலவுகள், அவர் எந்த வேட்பாளருக்காக பிரசாரம் செய்கிறாரோ, அவரது தேர்தல் செலவுக் கணக்கில் சேராது.
அந்த வகையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 40 நட்சத்திர பேச்சாளர்களின் பெயரையும், அங்கீகரிக்கப்பட்டாத கட்சிகள் 20 நட்சத்திர பேச்சாளர்களின் பெயரையும் தேர்தல் கமிஷனிடம் கொடுக்கலாம். அதன்படி, அரசியல் கட்சிகளின் சார்பில், நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் தேர்தல் ஆணையத்தின் அனுமதிககாக அனுப்பி வைக்கப்பட்டது. இதில், 222 நட்சத்திர பேச்சாளர்களுக்கு தேர்தல் ஆணையம்அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு அரசியல் களம் தகிக்கத் தொடங்கி உள்ளது.
அதன்படி, நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் உள்பட 40 பெயர்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவர்களின் பெயரை தேர்தல் கமிஷன் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது..
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஜி.கே.வாசன் உள்பட 16 நட்சத்திர பேச்சாளர்களின் பெயர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா, வீரபாண்டியன். முத்தரசன் உள்பட 40 பெயர்கள், அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வி.கே.சசிகலா உள்ளிட்ட 20 பெயர்கள் தேர்தல் கமிஷனிடம் அளிக்கப்பட்டன. அவர்களின் பெயர்கள் உள்பட மற்ற கட்சிகளையும் சேர்த்து மொத்த 222 பேரை நட்சத்திர பேச்சாளர்களாக அங்கீகரித்து தேர்தல் கமிஷன் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
மேலும் பல கட்சிகளும் தங்கள் தரப்பு நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தேர்தல் கமிஷனிடம் கொடுத்து வருகின்றன.”
[youtube-feed feed=1]