சென்னை: அதிமுக கூட்டணியில் தமாகா போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை முடிவாகி விட்டதாக கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். ஆனால், எத்தனை தொகுதி என்பதை தெரிவிக்க மறுத்து விட்டார்.

அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக ஆகிய கட்சிகளுக்கான தொகுதி உடன்பாடு  நேற்று (மார்ச் 23) மாலை அதிமுக தலைமை அலுவலகத்தில்  நடைபெற்றது. இநத நிகழ்ச்சியில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்கவில்லை. இது சலசலப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக,  அதிமுக கூட்டணியில் கடந்த தேர்தலை போல 6 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கேட்டிருந்தார். அதனால், அவரது கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படாதது விவாதப்பொருளானது. குறைவான தொகுதிகளையே ஒதுக்க முடியும் என்று அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் ஜி.கே.வாசன் அதிருப்தி காரணமாகதொகுதி பங்கீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் தமாகா போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை முடிவாகி விட்டதாக அந்த கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தொகுதி பங்கீட்டில் தமாகாவின் எண்ணிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்பட்டது. நேற்று இரவு நான் சென்னையில், மத்திய மந்திரியும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலை சந்தித்தேன். நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தொகுதி பங்கீட்டில் தமாகாவின் எண்ணிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்பட்டது”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

[youtube-feed feed=1]