சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதி ஒதுக்கீடு மார்ச் 23ந்தேதி மாலை முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பாஜக, பாமக, அமமுகவுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.

அதிமுக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணிக் கட்சி பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆலோசனை நடத்தினார். இதில் பாமக , அமமுக உள்ளிட்ட முக்கிய கூட்டணி கட்சிகள் இடம்பெற்றன. இந்த கூட்டத்தின் முடிவில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பாஜகவுக்கு – 27 தொகுதிகள், பாமகவுக்கு – 18 தொகுதிகள், அமமுகவுக்கு – 11 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15ந்தேதி அன்று மாலை அறிவித்துள்ளது. அதன்படி, வேட்புமனு தாக்கல் மார்ச் 30ம் தேதி தொடங்க உள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கிடுகளை இறுதி செய்து, வேட்பாளர்களை அறிவிக்க தயாராக உள்ளது. தமிழ்நாட்டில் இந்த முறை 5 முனை போட்டி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு அரசியல் களம் தகிக்கத் தொடங்கி உள்ளது.
இந்த நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் பங்கீடுகள் குறித்து பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் மார்ச்23ந்தேதி முடிவு எட்டப்பட்டது. இதைத் முடிவு அறிவிக்கப்பட்டது.
தொகுதி பங்கீடு குறித்த செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மற்ற மாநிலங்களில் தோற்கடிக்கப்பட்டது போன்றே தமிழ்நாட்டிலும், திமுக, காங்கிரஸ் கூட்டணி தோற்கடிக்கப்படும்” என கூறினார். எடப்பாடி பழனிசாமியை “வருங்கால முதலமைச்சர்” என குறிப்பிட்ட பியூஷ் கோயல், “இவரது தலைமையிலான ஆட்சியை தமிழ்நாடு மக்கள் விரும்புகிறார்கள்” என்று கூறினார்.
‘பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமி, “இன்னும் எங்கள் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்று இரவுக்குள் பேச்சுவார்த்தை முடிவுற்று அந்த கட்சிகளுக்கான தொகுதிகளின் எண்ணிக்கை அறிவிக்கப்படும்” என்று கூறினார்.
அதிமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்னும் சில கட்சிகளுக்கு நாங்கள் தொகுதிகள் ஒதுக்க வேண்டும். இதன் முடிவில் அந்த விவரங்களை தெரிவிப்போம்” என்றார்.
[youtube-feed feed=1]