சென்னை: திமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் கட்சி தலைவரான முதல் ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் நடத்திய வேட்பாளர் நேர் காணல் முடிவடைத்து. இதையடுத்து, வேட்பாளர் பட்டியல் இந்த வாரத்திற்குள் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15ந்தேதி அன்று மாலை அறிவித்துள்ளது. அதன்படி, வேட்புமனு தாக்கல் மார்ச் 30ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 4ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் இந்த முறை 5 முனை போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை களமிறக்க அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. இதன் காரணமாக தமிழ்நாடு அரசியல் களம் தகிக்கத் தொடங்கி உள்ளது.
திமுக சார்பில், சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்த திமுகவினருடனான நேர்காணல் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த நிலையில், நேற்றுடன் (மார்ச் 23ந்தேதி) முடிந்தது. இந்த நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேர்காணலை நடத்தினார். அப்போது பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் உடனிருந்தனர். போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தவர்களை தொகுதி வாரியாக அழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் செய்தார்.
முதல் நாளான கடந்த 17ம் தேதி புதுச்சேரி மாநிலத்தில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது. தொடர்ந்து 18ம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான நேர்காணல் தொடங்கியது. 18ம் தேதி மாவட்டங்களுக்கான நேர்காணலும், 19ம் தேதி கொங்கு மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களுக்கான நேர்காணலும் நடந்தது. 20ம் தேதி ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி உள்பட 41 மாவட்டங்களுக்கு உட்பட்ட தொகுதிகளுக்கான நேர்காணல் நடந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் (மார்ச் 22ந்தேதி) கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, நேர்காணல் நடந்தது. திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேர்காணலை நடத்தினார். இந்த நேர்காணலில் சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்த உதயநிதி ஸ்டாலினிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் செய்தார். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, அன்றைய தினம் (21ந்தேதி) நடைபெற இருந்த நேர் காணல் ஒத்திவைக்கப்பட்டு நேற்று (23ந்தேதி) நடைபெற்றது. நேற்று காலை திருச்சி வடக்கு, திருச்சி மத்திய, திருச்சி தெற்கு, தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, தஞ்சை மத்திய, பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்துக்கான நேர்காணல் நடந்தது.
தொடர்ந்து, மாலையில் புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, கடலூர் மேற்கு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டத்துக்கான நேர்காணல் நடந்தது. நேர்காணல் நேற்றுடன் முடிவடைந்தது.
இதையடுத்து வேட்பாளர்களை தேர்வு செய்வதில் திமுக தலைமை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, இந்த வாரத்தில் வேட்பாளர்களை அறிவிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 30ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என அறிவாலயம் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
[youtube-feed feed=1]