சென்னை:   நாடு முழுவதும் பெரும் வரவேற்பை  பெற்றுள்ள துரந்தர் 2 திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிட தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில்  மாதவன், ரன்வீர்சிங் நடித்த துரந்தர்-2  படத்தின் இரண்டாம் பாகம்  மார்ச் 19ந்தேதி அன்று  உலகம் முழுவதும் வெளியானது. இந்த படம்   வசூலில் சாதனை படைத்து வருகிறது.

ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் 2026-ல் வெளியான அதிரடித் திரைப்படம் துரந்தர் 2 .  தி ரிவெஞ்ச் (Dhurandhar: The Revenge). இதில் ரன்வீர் சிங், அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத், ஆர். மாதவன், சாரா அர்ஜுன், ராகேஷ் பேடி, மானவ் கோஹில் மற்றும் டேனிஷ் பாண்டோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  இந்தத் திரைப்படம், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளை வேட்டையாடும் கதைக்களத்தைக் கொண்டது, ரன்வீர் சிங் இரு வேடங்களில் நடித்துள்ளார்.

ஏற்கனவே துரந்தர்  முதல் பாகம் சுமார் 1350 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்து சாதனை படைத்தது.  மேலும், . தியேட்டரை தொடர்ந்து ஓடிடி தளத்திலும் துரந்தர் படம் அதிக வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், துரந்தர் 2 திரைப்படம் தற்போது உலகம் முழுவதும் வெளியாகி வசூலில் சாதனை படைத்து வருகிறது.

இந்த நிலையில்,  துரந்தர் 2 திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிட தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்யப் பட்டது. வழக்கறிஞர் ஷீலா என்பவர் அவசர முறையீடு செய்துள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் அமலான நிலையில் துரந்தர் 2 படத்தில் அரசியல் தொடர்பான சார்பு கருத்துகள் உள்ளதாக புகார் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதையடுத்து, முறையீட் il மனுவாக தாக்கல் செய்துவிட்டு முறையீடு செய்ய தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தியுள்ளார்.

[youtube-feed feed=1]