சென்னை: ஜோலார்​பேட்டை – தொட்​டம்​பட்டி இடையே தானியங்கி சிக்​னல் அமைக்​கும் பணி நடை​பெறு​வ​தால், அந்த வழியாக இயக்கப்படும்  13 ரயில்​களின் சேவை​யில் நாளை மாற்​றம் செய்​யப்பட உள்​ளது. 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுஉள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ரயில்வே செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,.

ரத்து செய்யப்பட்டுள்ள 6 ரயில்கள் விவரம்:

* அரக்கோணம் – சேலம் MEMU விரைவு ரயில் (காலை 05:15)

* சேலம் – அரக்கோணம் MEMU விரைவு ரயில் (பிற்பகல் 03:30)

* கோவை – சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி விரைவு ரயில் (காலை 06:20)

* சென்னை சென்ட்ரல் – கோவை இன்டர்சிட்டி விரைவு ரயில் (பிற்பகல் 02:30)

* ஈரோடு – ஜோலார்பேட்டை பயணிகள் ரயில் (காலை 06:00)

*ஜோலார்பேட்டை – ஈரோடு பயணிகள் ரயில் (பிற்பகல் 02:45)

சென்னை சென்ட்​ரல் – கோவைக்கு நாளை மதி​யம் 2.15 மணிக்கு புறப்​பட​ வேண்​டிய வந்​தே ​பாரத் ரயில், இரண்டு பணி நேரம் தாமத​மாக மாலை 4.15 மணிக்கு புறப்​படும்.

கோவை – சென்னை சென்ட்​ரலுக்கு நாளை பிற்​பகல் 3.15 மணிக்கு புறப்பட வேண்​டிய கோவை விரைவு ரயில், 2 மணி நேரம் தாமத​மாக மாலை 5.15 மணிக்கு புறப்​படும்.

இதுத​விர, 2 விரைவு ரயில்​கள் ஒன்​றரை மணி நேரம் இடை​யில் ஆங்​காங்கே நின்று செல்​லும்.

3 ரயில்​கள் மாற்​றுப் ​பாதை​யில் இயக்​கப்பட உள்​ளன.

இவ்வாறு தெற்கு ரயில்வே செய்​திக் ​குறிப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

 

[youtube-feed feed=1]