சென்னை: திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு எத்தனை இடம் பெறுவது மற்றும் சட்டமன்ற தேர்தல் பிரசாரம் உள்படபல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதிக்க இன்று மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா.

பணத்துக்காக உடல்நிலை சரியில்லாத கணவனை பொம்மையாக உட்கார வைத்து அரசியல் செய்தவர் பிரேமலதா விஜயகாந்த். இவரது அரசியல் நகர்வுகளே பண பேரம் என்றே விமர்சிக்கப்படுகிறது. கேப்டன் விஜயகாந்த் மறைந்து, அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நிகழ்விலேயே அரசியல் செய்தவர். இந்த முறை அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்துள்ளார். இதற்கு பரிசாக அவரது தம்பிக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கிடைத்துள்ளது. மேலும் பல தொகுதிகளும், பல கோடி பணமும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10க்கும் மேற்பட்ட தொகுதிகள் கேட்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால், திமுக தலைமை 10க்கும் குறைவாகவே தொகுதிகள் ஒதுக்குவதாக தெரிவித்துள்ளது. இதனால் பிரேமலதா அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும், அவரது தம்பி சுதிஷ் திமுகவின் ஆதரவால் ராஜ்யசபா எம்.பி.யாகி உள்ளதால், தேமுதிகவால் வேறு ஏதும் செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது.
இந்த நிலையில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தே.மு.தி.க.) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மார்ச் 23-ல் நடைபெறவுள்ளது. இதில், சட்டசபைத் தேர்தல் தொடர்பாகவும், கூட்டணித் தொகுதிப் பங்கீடு தொடர்பாகவும் ஆலோசிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் காலை 10 மணியளவில் மா.செ. கூட்டம் நடைபெறவுள்ளது.
இதில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தி.மு.க கூட்டணியில் தேமுதிகவுக்கான தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் எந்தெந்தத் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்து தி.மு.க – தே.மு.தி.க பேச்சுவார்த்தைக்குப் பின் தெரியவரும்.
இந்த பரபரபப்பான அரசியல் சூழலுக்கு இடையே பிரேமலதா விஜயகாந்த், டிபன்டர் காருடன் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்பட விவகாரம் விவாத பொருளமாக மாறி உள்ளது. சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றன. மாகியிருக்கிறது. திமுகவிடம் வாங்கிய பணம் டிபம்னர் காராக காட்சி அளிக்கிறது என்றும், கடுமையாக விமர்சித்து வருகின்றன.
[youtube-feed feed=1]